இந்தியாவில் மாறியவரும் உணவு பழக்கங்களால் பல்வேறு நோய்கள் உருவாகி வரும் நிலையில், பெரும் பாலான மக்கள் பாரம்பரிய உணவுக்கு மாறி வருகின்றனர்.
இந்த பாரம்பரிய உணவில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு ஆரோக்கிய நன்மைகள் கொண்டது.
அந்த வகையில் தற்போது பூண்டு மற்றும் பாலை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான ஆரோக்கிய நன்மைகள் அதிகம் கொண்ட உணவினை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து அதனுடன் 4-5 பூண்டை போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அந்த பாலுடன் பூண்டையும் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்து வர பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.
இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.
மேலும், பூண்டு ஒரு பாக்டீரியா எதிர்ப்பு பொருள் மற்றும் நச்சுயிர் எதிர்க்கும் குணங்களும் உண்டு.
பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த பூண்டு உதவி செய்யும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் பூண்டு முக்கிய முக்கிய பங்கு வகிக்கிறது.