34 C
Chennai
Wednesday, Aug 20, 2025
mouth
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உதட்டைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க அட்டகாசமான வழிகள்!!!

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதில் உதடும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய உதட்டின் அழகை கெடுக்கும் வண்ணம் அதனைச் சுற்றியுள்ள பகுதி கருமையாக இருக்கும். இந்த பிரச்சனையால் பல பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு அவ்விடத்தைச் சுற்றி மெலனின் என்னும் நிறமி அதிகம் இருப்பது தான் காரணம்.

ஆனால் இதற்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்தால், உதட்டைச் சுற்றியுள்ள கருமையை எளிதில் போக்கலாம். இங்கு உதட்டைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, உதட்டைச் சுற்றி 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, நன்கு உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் மாற்றத்தைக் காணலாம்.

தக்காளி ஜூஸ்

தக்காளி மிகவும் சிறப்பான ப்ளீச்சிங் பொருள். எனவே அந்த தக்காளியை வெட்டி, அதனைக் கொண்டு உதட்டைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து, உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு

தினமும் உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது அதன் துண்டுகளைக் கொண்டோ, உதட்டைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், மெலனின் அளவு குறைந்து கருமை நீங்கும்.

ஓட்ஸ்

1/2 கப் பாலுடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கருமை குறையும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. சருமத்தின் அழகை, நிறத்தை அதிகரிக்க வைட்டமின் ஈ மிகவும் அவசியம். எனவே வைட்டமின் ஈ அதிகம் நிறைந்த பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.

தயிர்

தயிர் கூட கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. எனவே அத்தகைய தயிரை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.

பால்

பாலும் கருமையைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு அன்றாடம் 2-3 முறை பாலைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ வளமாக நிறைந்துள்ளது. ஆகவே அதனைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் மற்றும் வாயைச் சுற்றியுள்ள கருமை மறையும்.

முட்டை

உதட்டைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க முட்டையின் வெள்ளைக் கருவை தடவி உலர வைத்து கழுவி வந்தாலும் பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, அதனை உதட்டைச் சுற்றி தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கருமை மட்டுமின்றி, உதட்டின் மேல் முடி வளர்வதும் நின்றுவிடும்.

கடலை மாவு

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதன் மூலமும் உதட்டைச் சுற்றியிருக்கும் கருமையைப் போக்கலாம்.

மஞ்சள்

மஞ்சள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. ஆகவே தினமும் முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளித்தால், கருமை நீங்குவதோடு, முகச்சருமம் மென்மையாக இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஒரு நாளைக்கு 2 முறை இதை பூசினால் காணாமல் போகும் கருவளையம்..!

nathan

முகப்பருவை போக்கி பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…! சூப்பர் டிப்ஸ்

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika

கரும்புள்ளியை ஒரே வாரத்தில் மறையச் செய்யும் ஒரு பொருள் என்ன தெரியுமா?

nathan

உதடுகளை அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி என்று தெரியுமா?

nathan

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க உதவும் சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்கள்!

nathan

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் பழங்கள் என்ன தெரியுமா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க கன்னம் மட்டும் கொழுகொழுன்னு இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan