29.5 C
Chennai
Saturday, Jul 26, 2025
hkhk e1446553554831
சிற்றுண்டி வகைகள்

பிரட் போண்டா தீபாவளி ரெசிபி

பிரட் போண்டா தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2 முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் – 1 கப் (நறுக்கியது) பச்சை பட்டாணி – 1 கப் தக்காளி – 2 பிரட் – 1 பாக்கெட் பால் – 1/4 லிட்டர் கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – சிறிதளவு கரமசாலா – தேவையான அளவு மஞ்சள் பொடி – சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி போட்டு எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, கரமசாலா, மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, பின் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாலில் பிரட்டை நனைத்து, அதில் செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து நீளமாகவோ, உருண்டையாகவோ உங்கள் வசதிப்படி செய்து எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். மிக ருசியாக இருக்கும், சாஸ் தொட்டும் சாப்பிடலாம்!
hkhk e1446553554831

Related posts

சத்தான… கருப்பட்டி ராகி கூழ்

nathan

சீனி வடை

nathan

சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

சுறாப்புட்டு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டைமண்ட் பிஸ்கெட்

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan