26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
Capture1
இனிப்பு வகைகள்

சோன் பப்டி தீபாவளி ரெசிபி

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 1/2 கப் மைதா – 1 1/2 கப் பால் – 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 2 1/2 கப் ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1 1/2 கப் பாலிதீன் ஷீட் – 1 நெய் – 250 கிராம்

செய்முறை:

ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். பின் அதனை குளிர வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும். பின் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும். பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும். இப்போது சூப்பரான சோன் பப்டி ரெடி!!!
Capture1

Related posts

தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி

nathan

ரவா பர்ஃபி

nathan

தொதல் – 50 துண்டுகள்

nathan

இனிப்பு சோமாஸ்

nathan

தேங்காய் பாயாசம்

nathan

லட்டு – பூந்திலட்டு

nathan

பன்னீர் பஹடி

nathan

சுவையான நட்ஸ் பால்ஸ் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

ஹயக்ரீவ பண்டி

nathan