30.7 C
Chennai
Wednesday, Aug 20, 2025
beauty tips
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சென்சிடிவ் சருமத்தினருக்கான சில ஃபேஸ் ஸ்கரப்கள்!!!

உங்கள் அழகை அதிகரிப்பதற்கு முகத்திற்கு எது போட்டாலும் ஒத்துக்கலையா? அப்ப உங்களுக்கு சென்சிடிவ் சருமம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் அனைத்துப் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்த முடியாது. எதைப் பயன்படுத்தினாலும், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல் போன்றவை ஏற்பட்டு, இருக்கும் அழகும் போய்விடும். ஆகவே சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் அழகை அதிகரிக்க எந்த ஒரு பொருளை பயன்படுத்தும் முன்னும் பலமுறை யோசிக்க வேண்டும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க ஒருசில அற்புதமான ஃபேஸ் ஸ்கரப்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி முகத்தை ஸ்கரப் செய்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் சருமத்தின் அழகை அதிகரிக்கலாம். மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கரப்கள் அனைத்தும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கக்கூடியவை.

வால்நட் ஸ்கரப்

1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் வால்நட் பேஸ்ட், 1 டீஸ்பூன் பாதாம் பேஸ்ட் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிதிமடம் ஊற வைத்து, பின் மெதுவாக ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமம் பொலிவோடு மின்னும்.

ஆரஞ்சு ஸ்கரப்

ஆரஞ்சு ஸ்கரப் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழத்தின் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

வாழைப்பழ ஸ்கரப்

ஒரு பௌல் மசித்த வாழைப்பழத்துடன், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, வட்ட வடிவில் ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஸ்கரப் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, சருமத்தின் நிறம் அதிகரித்துக் காணப்படும்.

தக்காளி ஸ்கரப்

தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்க்கரையில் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை ஸ்கரப் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் மற்றொரு பாதியைக் கொண்டு முகத்தை மீண்டும் ஸ்கரப் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் ஸ்கரப்

இந்த ஓட்ஸ் ஸ்கரப் செய்ய, ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1/4 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள பருக்கள், வெயிலினால் கருமையடைந்த சருமம், சருமத்தில் செதில்செதிலாக வருவது, சருமம் வறட்சியடைவது போன்றவை நீங்கும்.

Related posts

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

வீட்டிலேயே Facial செய்வது எப்படி ?

nathan

எப்போதும் முகம் ப்ரெஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan

உங்க முகச்சுருக்கத்தை உடனடியாகப் போக்க வேண்டுமா இதோ சில டிப்ஸ்…?

nathan

முகத்தில் பருக்கள் வர காரணம்

nathan

இத குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக்கும்

nathan

ஆண்களே! உங்கள் முகத்தைக் கருப்பாக காட்டும் அழுக்கைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan