28.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
13 1423816
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா கூந்தல் வறட்சியைப் போக்கும் சிறப்பான சில முட்டை மாஸ்க்குகள்!!!

கூந்தல் என்று வரும் போது வறட்சியின்றி மென்மையாக பட்டுப்போல் இருக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக பெண்கள் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற கெமிக்கல் கண்டிஷனர்களை அதிகம் பயன்படுத்துவார்கள். அப்படி கண்டிஷனர்களை அதிக அளவில் கூந்தலுக்குப் பயன்படுத்தும் போது, கூந்தல் தற்காலிகமாகத் தான் மென்மையாகுமே தவிர, அதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், நாளடைவில் கூந்தல் இயற்கை பொலிவை இழந்து, ஆரோக்கியமற்றதாக காணப்படும்.

ஆகவே கூந்தலை இயற்கை வழியில் மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் சமையலறைப் பொருட்களில் ஒன்றாக முட்டை விளங்குகிறது. கூந்தலைப் பராமரிக்க முட்டையைப் பயன்படுத்தினால், கூந்தல் இயற்கையாகவே மென்மையாவதோடு, கூந்தலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும். சரி, இப்போது அந்த முட்டையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடுவது என்று பார்ப்போம்.

முட்டை, எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் நன்கு கலந்து, 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1/2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

முட்டை, தயிர் மற்றும் ஆலிவ் ஆயில்

முட்டையில் புரோட்டீன் அதிக அளவில் நிறைந்திருப்பதால், முட்டையின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைக்கும். அதிலும் தயிரிலும் புரோட்டீன் இருப்பதால், இந்த மாஸ்க் இன்னும் சிறப்பாக செயல்படும். அதற்கு முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைடியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

முட்டை, கடலை மாவு மற்றும் ஆலிவ் ஆயில்

இந்த மாஸ்க்கிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த மாஸ்க் செய்ய ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு மாஸ்க் போட வேண்டும்.

முட்டை, வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில்

வாழைப்பழம் மிகவும் சிறப்பான ஒரு மாய்ஸ்சுரைசர். ஆகவே முட்டையுடன் வாழைப்பழத்தை சேர்த்து மாஸ்க் போட்டால் இன்னும் நல்ல மாற்றத்தை உடனே காணலாம். அதற்கு முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதில் வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி கலந்து, தலைக்கு மாஸ்க் போட வேண்டும்.

மயோனைஸ்

உங்களுக்கு முட்டையை அடித்து, அதில் எண்ணெய் சேர்த்து கலந்து மாஸ்க் போட சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்படியெனில் உங்கள் வீட்டில் மயோனைஸ் இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் மயோனைஸானது முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்யப்படுவதாகும். ஆகவே இதனைப் பயன்படுத்தி தலைக்கு மாஸ்க் போடலாம்.

முட்டை நாற்றத்தைப் போக்க…

முட்டை மாஸ்க் போட்ட பின்னர், கூந்தலில் இருந்து முட்டையின் நாற்றம் வீசும். அத்தகைய நாற்றத்தைக் போக்க, ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசிய பின்னர், வினிகரை குளிர்ந்த நீரில் கலந்து, அதனைப் பயன்படுத்து கூந்தலை இறுதியில் அலச வேண்டும். இதன் மூலம் கூந்தலில் இருந்து வீசும் முட்டை நாற்றத்தைப் போக்கலாம்.

Related posts

ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி கருப்பாக்கலாம்?

nathan

நேரான முடியை பெறவேண்டுமா?

nathan

பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்

nathan

முடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

nathan

பொடுகு தொல்லை நீங்க சில வழிகள்.

nathan

ஹேர் மாஸ்க்கை மட்டும் நைட் யூஸ் பண்ணுனீங்கனா… உங்களுக்கு முடி கொட்டவே கொட்டாதாம்!

nathan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

nathan

ஆண்களோ, பெண்களோ மளமளவென கூந்தல் வளர உதவும் இந்திய மசாலாப் பொருட்கள்!

nathan

பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்!

nathan