32.2 C
Chennai
Monday, May 20, 2024
21 sesamerice
​பொதுவானவை

சூப்பரான எள்ளு சாதம்

எள் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? காலையில் அந்த எள்ளைக் கொண்டு சமையல் செய்ய ஆசையா? அப்படியானால் எள்ளைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு கலவை சாதம் செய்யலாம். இந்த சாதம் சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த எள்ளு சாதத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

 

தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 5-6

கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

கருப்பு/வெள்ளை எள் – 100 கிராம்

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வைத்து 2-3 விசில் விட்டு இறக்கி, பின் விசில் போனதும் குக்கரை திறந்து சாதத்தை ஒரு தட்டில் போட்டு உலர வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள் சேர்த்து வறுத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் சாதம், உப்பு மற்றும் பொடி செய்து வைத்துள்ள எள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான எள்ளு சாதம் ரெடி!!!

Related posts

சுவை மிகுந்த காளான் மசாலா

nathan

சாம்பார் பொடி செய்வது எப்படி

nathan

ஓம பொடி

nathan

காதலுக்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள்

nathan

ஆப்பிள் ரசம்

nathan

மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள்

nathan

கறிவேப்பிலை தொக்கு

nathan

கணவன் – மனைவி ஆனந்தமாய் வாழ வேண்டுமா?

nathan

பெண்கள் ஆண் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்லும் போது கவனம் தேவை

nathan