26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
hhkkh
சைவம்

பாலக் பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 250 கிராம் எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பசலைக் கீரை – 2 கட்டு வெந்தயக் கீரை – 1/2 கப் பச்சை மிளகாய் – 4-5 கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு சீரகம் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தயிர் – 3-4 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் – 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து,

நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, அத்துடன் உப்பு, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தயிர், க்ரீம் சேர்த்து கிளறி, பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பாலக் பன்னீர் ரெடி!
hhkkh

Related posts

கேரள கடலை கறி செய்வது எப்படி

nathan

வெஜிடபிள் மசாலா

nathan

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

சின்ன வெங்காய குருமா

nathan

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

தயிர் சாதம்

nathan

சுவையான கோவைக்காய் ரைஸ் செய்வது எப்படி

nathan

கொண்டக்கடலை தீயல்

nathan