30.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
pimples
முகப்பரு

முகப்பருக்கள் வருவதை தடுக்கவும் , குனபடுதவும் சில எளிய ஆயுர்வேத வழிகள்.!

நம்மில் ஒவ்வொருவரும் பருக்களால் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்திருப்போம். இதற்காக எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லை. ஆனால் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்கள் விரைவில் நீங்கவும் ஒருசில குறிப்புக்கள் உள்ளன.

பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தினால் பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். எனவே பொறுமையுடன், ஆயுர்வேத முறையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள் என்னவென்று பார்ப்போம்.

ஆயுர்வேத மருத்துவமானது, உணவில் கசப்பான உணவுப் பொருட்களை அதிகம் சேர்க்கச் சொல்லும். ஏனெனில் கசப்பான உணவுப் பொருட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது, பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, பல சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். அதற்கு வாயில் காற்றினை நிரப்பி சிறிது நேரம் கழித்து மெதுவாக காற்றினை வெளிவிட வேண்டும். இப்படி தினமும் 10-12 நிமிடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

சந்தனப் பொடியை வேப்பிலை தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உல வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சனையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு தூங்க செல்ல வேண்டும். இப்படி அன்றாடம் பின்பற்றி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.
pimples

பருக்களைப் போக்க ஆயுர்வேதம் என்று வரும் போது, அதில் நிச்சயம் மஞ்சளும் இடம் பெறும். அதற்கு மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.

குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும் என்று தெரியுமா? எனவே தினமும் 3-4 முறை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

Related posts

ஒரே நாளில் முகத்தில் இருக்கும் பிம்பிள் மாயமாய் மறைய வேண்டுமா?

nathan

முகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி உபயோகப்படுத்துவது என தெரியுமா?

nathan

பருக்களை நீக்கும் அழகு சாதனங்கள் -தெரிந்துகொள்வோமா?

nathan

இரண்டே வாரத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வேண்டுமா

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க நிரந்தர சிகிச்சை!…

sangika

முகப்பருவுக்கு காரணங்கள்

nathan

இயற்கையான முறையையில் கரும்புள்ளிகளை போக்க……

sangika

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

nathan