30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
25 chicken gravy
அசைவ வகைகள்

மிகவும் சிம்பிளான சிக்கன் கிரேவி …

பேச்சுலர்கள் எப்போதும் சைவ உணவுகளை மட்டும் தான் செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. அசைவ உணவுகளை கூட செய்து சாப்பிடலாம். அதிலும் சிக்கனைக் கொண்டு மிகவும் ஈஸியாகவும், சிம்பிளாகவும் சிக்கன் கிரேவி செய்து சாப்பிடலாம்.

இங்கு பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளான சிக்கன் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 3 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

சோம்பு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு, அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 5-10 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து ஒரு முறை பிரட்டி, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவினால், சிக்கன் கிரேவி ரெடி!!!

Related posts

மஷ்ரூம் ஆம்லெட்

nathan

ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு

nathan

தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

nathan

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா!

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு…

nathan

சுவையான கொத்து கோழி

nathan

மட்டன் மிளகு வறுவல் எப்படிச் செய்வது?

nathan