மூக்கிற்கு மேலே சிலருக்கு சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் அத்தகைய கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும்.
இத்தகைய கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளால் வரக்கூடியது. இதற்கு அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவதோடு, முகத்தை ஸ்கரப் செய்யவும் வேண்டும்.
அதற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டுச் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே அற்புதமான ஸ்கரப்புகளை செய்யலாம். சரி, இப்போது அந்த ஃபேஸ் ஸ்கரப்புகளை எப்படி செய்வதென்று பார்ப்போமா..!
கடலை மாவு
கடலை மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை மூக்கின் மேல் தடவி, கீழிருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
உப்பு
உப்பை நீரில் கலந்து, மூக்கின் மேல் தடவி, மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பு நீங்கும்.
சர்க்கரை
சர்க்கரையை எலுமிச்சை சாற்றில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
பட்டை
பட்டை பொடியை எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக் கருவை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.
தயிர்
தயிரில் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, கோடையில் முகத்தை தேய்த்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்து, அதனைக் கொண்டு முகத்தில் சொரசொரப்பாக உள்ள இடத்தில் தேய்த்து கழுவினால், சொரசொரப்பு நீங்கிவிடும்.
தேன்
தேனை சாதாரணமாக முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் நீங்கும்.
டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.
தக்காளி
தக்காளியில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, கரும்புள்ளிகளை எளிதில் வெளியேற்ற உதவும். அதற்கு தக்காளியை இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.