ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.
தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு பாதங்களை ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர்இ உப்பு எலுமிச்சைச்சாறு ஷாம்பு போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்த பிறகு பிரஷ்சினாலே சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
செருப்பு அணியாமல் நடப்பது அதிக ஈரம் உள்ள இடத்தில் வேலை செய்வது போன்ற காரணங்களாலும் பித்த வெடிப்பு ஏற்படலாம். இந்த பாதிப்பு இருந்தால் வெந்நீரில் உப்பு கலந்து பாதத்தை நன்கு தேய்த்து கழுவுவது நல்லது.
வெதுவதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு மென்மையாக ஸ்கிரப்பர் வைத்து தேய்க்கவும்.. தொடர்ந்து இப்படி செய்வதால் தோல்கள் உதிர்ந்து ஸ்மூத்தாகும். பிறகு பாதங்களை துடைத்துவிட்டு கால் பாதங்களுக்கு தடவும் கீரிமை போடவும்.