க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. அதிலும் சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது விளங்குகிறணத.
• மூன்று டேபிள் ஸ்பூன் க்ரீன் டீயில், கொக்கோ பவுடர் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உடனே பொலிவைக் காணலாம்.
• பப்பாளியை அரைத்து, அதில் சிறிது க்ரீன் டீ சேர்த்து கலந்து கொள் வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி, லேசாக துடைத்து, பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் நன்கு புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.
• க்ரீன் டீயில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கி, முகமானது பொலிவடையும்.
• சரும சுருக்கத்தைப் போக்குவதற்கு, 3 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் சுருக்கமின்றி இளமையுடன் காணப்படும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். 30 வயதிற்கு மேல் உள்ளள பெண்கள் இதை பயன்படுத்தலாம்.