சிலருக்கு சருமம் மிகவும் வறட்சியாக இருக்கும். இப்படி வறட்சியான சருமம் உள்ளவர்களுக்குத் தான் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படும். அதில் குறிப்பாக முதுமைத் தோற்றம், சரும வெடிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், வறட்சியான சருமம் உள்ளவர்கள் அன்றாடம் தவறாமல் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் சரும வறட்சி அதிகரித்து, பிரச்சனைகளானது தீவிரமடைந்துவிடும்.
இந்த வகை சருமம் உள்ளவர்கள் அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வறட்சியைத் தடுக்கலாம். அதிலும் இயற்கையான ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான ஒருசில ஃபேஸ் பேக்குகளை கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!
வாழைப்பழ ஃபேஸ் பேக்
சிறிது வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது தயிர் சேர்த்து கலந்து, அதனை முகத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
அவகேடோ ஃபேஸ் பேக்
அவகேடோ பழத்தை மசித்து, அதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி, அதனைத் தொடர்ந்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், சரும வறட்சி நீங்கி, சருமமும் பொலிவோடு இருக்கும்.
வெண்ணெய் ஃபேஸ் பேக்
சிறிது வெண்ணெய் எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்
முட்டைக்கோஸை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி பின் குளிர்ந்த நீரில் மீண்டும் கழுவ வேண்டும். இதனாலும் சரும வறட்சி நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.
வெங்காய ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த ஃபேஸ் பேக் நல்ல பலனைத் தரும். அதற்கு 2 டீஸ்பூன் வெங்காய சாற்றில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சரும சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.
கோதுமை மாவு ஃபேஸ் பேக்
ஒரு பௌலில் கோதுமை மாவை எடுத்து, அதில் சிறிது மில்க் க்ரீம் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உவர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, வறட்சியும் நீங்கும்.
குறிப்பு
மேற்கூறிய ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் போது, எவையேறும் அலர்ஜியை ஏற்படுத்தினால், அந்த ஃபேஸ் பேக்கை மீண்டும் முயற்சிப்பதை தவிர்த்திடுங்கள்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…