24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
m13
அலங்காரம்மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம்..

தற்கால பெண்களுக்கு படிப்பு, வேலை மற்றும் பல வேலைகள் இருப்பதால் இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. திடீரென திருமணம் நிச்சயமானவுடன் அவர்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகிறது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான பெண்களுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கிறது. மேலும் 3 மாதம், ஒரு மாதம் என்று குறைந்த நேரத்திலும் அவர்களை தயார் செய்ய பார்லர்களில் வித விதமான விதிமுறைகளை செயல்படுத்துகின்றனர்.

முதலில் 6 மாதம் முன்னதாக என்றால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். அவர்களுக்கு முதலில் தலைமுடியை மாதம் ஒரு முறை நன்றாக ஆயில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் போட்டு வரலாம். முகத்துக்கு நல்ல தரமான பிளீச்சிங் மற்றும் பழ பேஸியல் செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பெடிக்யூர், மெனிக்யூர் மாதம் ஒரு முறை செய்து கொண்டே வந்தால் கல்யாண நேரத்தில் நல்ல பலன் தெரியும். இவர்கள் திருமணத்துக்கு முதல் மாதமும், திருமணத்துக்கு முன்பும் ஒரு கோல்டன் பேஸியல், பிரெஞ்சு பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை செய்து கொள்வதன் மூலம் அழகிய தோற்றத்தை பெறலாம். இந்த 6 மாதம் எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு வந்தாலும் சுத்தமான நீரினால் முகத்தை கழுவுதல், வெள்ளரிப் பிஞ்சை கண்கள் மேல் வைத்துக் கொள்ளுதல் எலுமிச்சை, தயிர் போன்றவற்றை முகம் மற்றும் கை, காவெள்ளரிப் பிஞ்சை ல்களில் தடவி வருதல் ஆகியவற்றை செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் இது கூடுதல் பலனை அளிக்கும்.

இனி 3 மாதம் முன்னதாகவே தயாராக வேண்டிய மணப்பெண் முதல் மாதம் முதலே பிளீச்சிங் பேஸியல் அல்லது கோல்டன் பேஸியல் ஆகியவற்றை தவறாமல் செய்து கொள்வது நல்லது. இது முகப்பொலிவை உடனடியாக எடுத்துக் காட்டுகிறது. இது போல தலை முடியை பராமரிப்பதற்கும் சூடான எண்ணையில் மசாஜ் செய்வதோடு கூட வைப்ரேட்டர், ஹை-பிரிகுவன்சியை உபயோகப்படுத்தி தலை முடியை பேன், பொடுகு, தொல்லை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இத்துடன் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரையும் அவசியமாக செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் எந்தவிதமான தோல் பிரச்சினை, பொடுகு பிரச்சினைகளோ, கை, கால், நகங்களின் மூலம் உண்டாகும் பிரச்சினைகளையோ தவிர்க்கலாம்.

திருமணத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு சிறப்பு மணமகள் பேக்கேஜ் என்ற ஒரு வசதியை செய்து கொள்ளலாம். 3 மற்றும் 4 மணி நேரம் செலவிட்டால் மசெலவிட்டால் ணப் பெண்ணை உச்சி முதல் பாதம் வரை தயார் செய்து விடலாம்.

முதலில் தலை முடிக்கு சிறப்பான சூடு பருவத்தில் எண்ணையில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் மூலம் முடியை சுத்தமாக்கி பளபளப்பாக வைத்த பின்னர் முகத்துக்கு பிளீச்சிங் செய்தவுடன் கோல்டன் பேஸியல் செய்து முகத்தின் சதைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். கை, கால்களில் உள்ள நிறத்தை அதிகரிக்க முதலில் பிளீச்சிங் செய்து, பிறகு வேண்டாத முடியை நீக்க வேக்சிங் செய்கிறோம். இதன் மூலம் நிறம் அதிகரிப்பது மட்டு மல்லாமல் தோலும் மிருதுவாக இருக்கும். அதன் பிறகு பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை பிரெஞ்ச் முறையில் செய்து பாதங்களையும், நகங்களையும் அழகு மிளிரச்செய்யலாம்.

திருமணத்துக்கு முன் உடல் முழுவதையும் மசாஜ் செய்து கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும், சுறு சுறுப்பையும் கொடுக்கும். இவை அனைத்தும் மணமகள் அலங்காரத்தில் அடங்கும்.

திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கை, கால்களில் மெஹந்தி எனப்படும். மருதாணியால் போடும் டிசைன்களை இப்பொழுது பலரும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். மணமகள் மருதாணி அலங்காரம் என்பது முழங்கை வரை போடப்படும்.   கறுப்பு மெஹந்தி என்று தற்போது போடும் கறுப்பு மெஹந்தி டிசைனையும் மணப்பெண் தவிர மற்றவர்கள் போட்டுக்கொள்கிறார்கள். கால்களுக்கும் கொலுசு டிசைன் முதல் காலை முற்றிலும் மூடும் ராஜஸ்தானி டிசைனையும் போட்டுக் கொள்ளலாம். தங்க கலர், சில்வர் கலர், கிலிட்டர்ஸ் ஆகியவற்றையும் வரவேற்பு நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்.m13

Related posts

கண்களை அலங்கரிங்கள்

nathan

ஒட்டியாணம் இளம் பெண்கள் அவசியம் அணிய வேண்டுமாம்!…

sangika

மணப்பெண் அழகுடன் திகழ சில நடைமுறைகள்

nathan

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க!

sangika

அகலமான நெற்றி உடைய பெண்ணா நீங்கள் அப்போ இத படிங்க!….

sangika

மேக்கப் ரகசியம்

nathan

கண்களுக்கு மேக்கப்

nathan

கலாக்காய்யின் நன்மைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்…..

sangika

அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்

nathan