குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது! இப்படி வரும் பருக்களை விரட்டியடிக்கிறது “துளசி பேக்”. சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து, பருக்கள் மீது தடவி… 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்! ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
பனிக்காலத்தில் “மேக்கப்” போடும்போது, முகத்தில் நீர் கோர்த்துக் கொண்டு பொதபொதவென்று ஆகிவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது. 10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை, லவங்கம் 1. இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங்கள். பிறகு மேக்கப் போடுங்கள்.
இதனால், தோல் இறுக்கமாகும். கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்.