29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
01 blackheads remed
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கரும்புள்ளியை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

அழகைக் கெடுப்பதில் எப்படி முகப்பருக்கள் முதன்மையாக உள்ளதோ, அதற்கு அடுத்தப்படியாக இருப்பது கரும்புள்ளிகள் தான். இத்தகைய கரும்புள்ளிகளை நீக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்கள் கடைகளில் இருந்தாலும், அவை அனைவருக்குமே சிறந்ததாக செயல்படும் என்று சொல்ல முடியாது.

ஏனெனில் அந்த கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தினால், சில சமயங்களில் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே அத்தகைய பிரச்சனைகள் எல்லாம் வராமல் இருக்க வேண்டுமென்றால், அதற்கு இயற்கை முறை தான் சிறந்தது. இப்போது அந்த கரும்புள்ளிகளை இயற்கை வழியில் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.

ஓட்ஸ்

கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

தக்காளி

தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.

கொத்தமல்லி

கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் ஒரு சிறந்த மருந்து. இதனை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும்.

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

Related posts

ஆண்களே உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

மகத்துவம் பெற்ற மாதுளை..!

sangika

பெண்களே அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க…

nathan

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்…

nathan

பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

ஆரஞ்சுப் பழ சருமப் பராமரிப்பிற்கு

nathan

கருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்…

nathan