27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
eyebrow
முகப் பராமரிப்பு

பெண்களே அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க…

கண்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் புருவங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய புருவங்களானது சிலருக்கு அடர்த்தியாக இருக்காது. இதனால் அவர்கள் புருவங்கள் நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வெளிப்பட பென்சிலைப் பயன்படுத்துவார்கள். இப்படி எத்தனை நாள் தான் பயன்படுத்துவீர்கள். ஆகவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

அதற்காக அழகு நிலையங்களுக்கு செல்வதோ அல்லது விலை உயர்ந்த க்ரீம்களையோ வாங்கி பயன்படுத்தவோ வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு புருவங்களை பராமரித்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இப்போது அடர்த்தியான புருவங்களைப் பெற உதவும் அந்த வழிகளைப் பார்ப்போம்.

விளக்கெண்ணெய்

தினமும் இரவில் படுக்கும் போது புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், நிச்சயம் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதுடன், கருமையாகவும் வளரும்.

வேஸ்லின்

தினமும் 2-3 முறை புருவத்திற்கு வேஸ்லின் தடவி வந்தாலும், புருவங்களானது அடர்த்தியாக வளரும்.

தேங்காய் எண்ணெய்

பொதுவாக தேங்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே அத்தகைய தேங்காய் எணணெயை தினமும் இரவில் படுக்கும் போது சூடேற்றி வெதுவெதுப்பான நிலையில் புருவங்களில் தடவி, இரவு முழுவதுங்ம ஊற வைத்து வந்தால், நாளடைவில் புருவங்களானது நன்கு வளர்வதைக் காணலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருப்பதால், அவற்றை அன்றாடம் புருவங்களில் தடவி வந்தால், புருவத்தின் அடர்த்தி அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலும் மிகவும் சிறப்பான பொருள். அதனைக் கொண்டும் தினமும் புருவங்களை மசாஜ் செய்து ஊற வைத்து வைத்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

கற்றாழை ஜெல்

கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருப்பதுடன், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

வெங்காய சாறு

வெங்காய சாற்றினை காட்டனில் நனைத்து புருவங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை செய்து வந்தாலும் புருவங்கள் வளரும்.

தேங்காய் பால்

தேங்காய் பால் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பான பொருள். எனவே அதனைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், புருவங்கள் நன்கு வளர்ச்சியடையும்.

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களுக்கு தடவி வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

வெந்தயம்

வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அதனை பேஸ்ட் செய்து புருவங்களின் மேல் தடவி ஊற வைத்து கழுவினால், புருவங்களின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து புருவங்கள் நன்கு வளரும்.

எலுமிச்சை

எலுமிச்சையை புருவங்களில் தடவி வந்தாலும், புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

பால்

தினமும் குளிர்ந்த பாலை புருவங்களின் மேல் தடவி ஊற வைத்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்வதைக் காணலாம்.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா?

nathan

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan

நம்முடைய மூக்கை சிறியதாகவும் கூர்மையாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

sangika

இந்த உணவு பொருட்களில் தயாரிக்கும் 5 ஃபேஸ் பேக்குகள் உங்கள ஹீரோயின் மாதிரி ஜொலிக்க வைக்குமாம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சிறிய கண்களை அழகாக காட்ட டிப்ஸ்

nathan

முகமும், கழுத்தும் ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க பப்பாளி வைத்தியம்!…

sangika

முகம் பிரகாசமாய் ஜொலிக்க சம்மரில் எந்த மாதிரியான ஃபேஸ் மாஸ்க் யூஸ் பண்ணணும் தெரியுமா?

nathan