28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
Image 60
அசைவ வகைகள்

சுவையான முட்டை கறி செய்ய !!

தேவையான பொருட்கள்:

முட்டை – 6
வெங்காயம் – 2
இஞ்சி, தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள், தனியாத்தூள் – தலா 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம் – தலா கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முட்டையை வேகவைத்து உரித்து பாதியாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.மசாலா நன்கு வதங்கிய பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். கடைசியாக தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும். சுவையான எக் கறி தயார்.

Related posts

முப்பதே நிமிடத்தில் சூப்பரான சிக்கன் -தேன் சூப் செய்ய தெரியுமா? -ரம்ஜான் ஸ்பெஷல்!!

nathan

ஃபிங்கர் சிக்கன் (finger chicken)

nathan

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை

nathan

செட்டிநாட்டு இறால் வறுவல்

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

“நாசிக்கோரி”

nathan

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி

nathan

முட்டை பணியாரம்

nathan