முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில் கிடைக்கும். இது போக வெள்ளை, பச்சை, பழுப்பு மற்றும் ஆலிங் என பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது. நம் முடி மற்றும் சரும பிரச்னைகளுக்கு தீர்வு அளித்திட இயற்கை இந்த அதிசய பொருளை நமக்கு வழங்கியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சும், சுத்தப்படுத்தும் மற்றும் கிருமிநாசினி குணங்களை இது கொண்டுள்ளதால், பல்வேறு முடி மற்றும் சரும நிலைகளை குணப்படுத்த உதவிடும். சிக்கனமான இந்த இயற்கை பொருள் பயன்படுத்த பாதுகாப்பானது. இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
சரும நிறம் மேம்படும் : முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால், சரும நிறம் மேம்படும். 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் புதினா பொடியை சேர்த்து, அதனை நன்றாக கலந்திடவும். இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்து பகுதிகளும் தடவும். 20-30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள்.இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், உங்கள் சருமத்தின் நிறம் மேம்படும்.
சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை உறிஞ்சிடும் :
இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். சரும துவாரங்களின் அடைப்பை நீக்கி, சருமத்தின் இயற்கையான பிஎச் அளவை சமநிலைப்படுத்தும். இது பொதுவாக வீட்டில் செய்யப்படும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகிறது.
தழும்புகளை நீக்கும் :
புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.
பொடுகு சிகிச்சை :
பொடுகு தொல்லைக்கு சிகிச்சை அளிக்க காலம் காலமாக முல்தானி மெட்டி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது பொடுகை ஏற்படுத்தும் எண்ணெய், கிரீஸ் மற்றும் அழுக்கை உறிஞ்சிடும். கூடுதலாக, தலைச்சருமத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தலைசருமத்தை சுத்தமாக வைக்க இது முக்கியமாகும். ஆரஞ்சு தோலின் பொடி மற்றும் முல்தானி மெட்டியை சரிசமமான அளவில் கலந்து ஹேர் பேக் ஒன்றை தயார் செய்திடவும். இதனை தலைச்சருமத்திலும் முடியிலும் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு பிறகு, தண்ணீரை கொண்டு தலையை கழுவுங்கள். மிதமான ஷாம்பு கொண்டு, முடியை கழுவுங்கள். பொடுகை சிறந்த முறையில் குறைக்க இந்த வீட்டு சிகிச்சையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பின்பற்றவும்.
முடியின் நுனிகள் பிளவுபடுவதை தடுக்கும் :
ஷாம்புவிற்கு சிறந்த மாற்றாக முல்தானி மெட்டி செயல்படும் என்பது அனைவரும் அறிந்ததே. முடியின் நுனிகள் பிளவுபடுவதை தடுக்க இது கண்டிஷனராகவும் செயல்படும். உங்கள் முடியை முல்தானி மெட்டி கொண்டு அப்பப்போ கழுவுங்கள். இதனால் உங்கள் முடி ஈரப்பதத்துடன் விளங்கி, நுனிகள் பிளவுபடுவது தடுக்கப்படும். மேலும் இரத்த ஓட்டத்தை இது ஊக்குவிப்பதால், கூந்தலை மென்மையாக்கி, பிரகாசமடைய செய்து, வளர்ச்சியையும் மேம்படுத்தும்.