தேவையான பொருட்கள் :
- மெகந்தி கோன்
கால் பாதங்களின் ஒரத்திலிருந்து படத்தில் உள்ளது போல் வளைவுகள் வரைந்துக் கொள்ளவும். சிறிது இடைவெளிவிட்டு அதன்கீழ் மற்றொரு வளைவுகளை வரைந்துக் கொள்ளவும். இதுப்போல் பாதத்தின் ஓரங்கள் முழுவதும் வரைந்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொரு வளைவின் நடுவிலும் சின்ன பூக்கள் வரையவும்.
பூக்கள் வரைந்து முடித்ததும் ஒவ்வொரு வளைவிற்கு கீழும் தனித்தனி முத்துக்கள் போன்று இருப்பதற்காக சிறிது இடைவெளிவிட்டு மூன்று முத்துக்கள் வரைந்துக் கொள்ளவும். இது கால் ஓரங்களில் எளிமையாக போட்டுக்கொள்ளக் கூடிய ஒரு டிசைன்.
இதேப் போல் காலில் போடக்கூடிய மற்றொரு டிசைன். கால்பாதத்தின் ஒரங்களில் சிறிய இடைவெளி விட்டு விட்டு பூக்களை வரைந்துக் கொள்ளவும். பூக்கள் வரைந்து முடித்ததும் அவற்றை இணைப்பது போல் கொடி வரையவும்.
வரைந்த கொடிகள் எல்லாவற்றிலும் சிறிய இலைகள் போல் போட்டுக் கொள்ளவும். இதுப்போன்று பாதத்தின் ஓரங்கள் முழுவதும் போட்டுக் கொள்ளவும்.
அடுத்து இந்த வகை டிசைன் கால்பாதத்தின் மேலே போடக்கூடியவை. முதலில் கால்பாதத்தின் நடுவில் ஒரு வட்டம் வரைந்து அதன் உள்ளே சிறிய சிறிய கட்டம் போன்று வரைந்துக் கொள்ளவும். பிறகு வரைந்த வட்டத்திற்கு வெளியே சிறிது இடைவெளி விட்டு மீண்டும் ஒரு வட்டம் வரைந்துக் கொள்ளவும்.
வட்டங்களை சுற்றிலும் எட்டு இதழ்கள் கொண்ட பூக்களை வரையவும்.
பிறகு அந்த இதழ்களின் நடுவில் “v” வடிவில் சிறிய கோடுகள் போட்டுக் கொள்ளவும். இதுப்போல் எட்டு இதழ்களிலும் வரைந்துக் கொள்ளவும்.
கடைசியாக தோரணம் போன்ற இந்த வகை டிசைனை விரல்களின் நடுவில் போட்டுக் கொள்வதற்கு பொருந்தும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய சுலமபான இந்த மெகந்தி டிசைன் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள்.