28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
oil
சரும பராமரிப்பு

பெண்களே உங்க கை வயசானவங்க கை மாதிரி இருக்கா? இத ட்ரை பண்ணுங்க…

தற்போதைய இளம் வயதினரின் கைகளைப் பார்த்தால், அவர்களின் கை மட்டும் சுருக்கம் அதிகமாக வயதானவரின் கைகளைப் போன்று காணப்படும். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கைகளுக்கு போதிய பராமரிப்பு கொடுக்காதது தான். அதுமட்டுமின்றி, வெளியே வெயிலில் செல்லும் போது, கைகளில் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால், கைகள் கருப்பாக மாறுவதுடன், கைகளில் நீர்ச்சத்தானது குறைந்து சுருக்கங்களை அதிகமாக்கும்.

 

ஆகவே முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்புக்களைப் போலவே, கை மற்றும் கால்களுக்கு கொடுத்து வர வேண்டியது அவசியம். சரி, இப்போது கைகளில் சுருக்கங்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சுருக்கங்களை போக்கவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன்படி செய்து வந்தால், நிச்சயம் சுருக்கங்களைப் போக்கலாம்.

மாய்ஸ்சுரைசர்

கைகளில் ஈரப்பசை குறைவாக இருந்தால், அவை சுருக்கங்களை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் தடவி வாருங்கள்.

எண்ணெய் சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் சரும சுருக்கமே ஏற்படாது. ஏனெனில் அவர்களின் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும். ஆகவே இரவில் படுக்கும் போது, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவில் படுக்கும் போது கை மற்றும் கால்களுக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடற்பயிற்சி

தினமும் கைகளுக்கு நன்கு உடற்பயிற்சி செய்து வந்தால், அவை கைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

சன்ஸ்க்ரீன்

வெளியே வெயிலில் செல்லும் போது, மறக்காமல் சன்ஸ்க்ரீன் தடவிச் செல்லுங்கள். இதனால் கைகளில் சூரியக்கதிர்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

பாதி எலுமிச்சை சாறு எடுத்து, அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கைகளில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் உலர வைத்து, பின குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், கைகளில் உள்ள அழுக்குகள், கருமை மற்றும் சுருக்கங்கள் மறையும்.

பால் மற்றும் எலுமிச்சை

2 டீஸ்பூன் பாலில், பாதி எலுமிச்சையை பிழிந்து, அதனை கைகளில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கைகளில் உள்ள சுருக்கங்களைப் போக்கலாம்.

தக்காளி சாறு

தினமும் தக்காளி சாற்றினை கைகளில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவி வர வேண்டும்.

 

Related posts

அழகு குறிப்புகள்:அழகு தரும் பூ…

nathan

அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

முகத்தில் வளரும் முடி வளராமலிருக்க..

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

உங்களுக்கு கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களை மணப்பெண் போல் ஜொலிக்க வைக்கும் சந்தனம்!!

nathan

சரும வறட்சியை போக்கும் பீர் ஃபேஷியல்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்திய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த பொருட்கள்தான்…!

nathan

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?

nathan