29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
1435128881 F newstig21231 1
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சந்தைகளில் பல்வேறு hair remover, losans ஆகியவை விற்கப்படுகின்றன. ஆனால் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளை மனதில் கொள்ள வேண்டும்.

பிறகு என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இயற்கையான முறையே எப்போதும் சிறந்தாக இருக்கும்.

மஞ்சளின் மகிமையை அறியாதவர்கள் யாரும் இல்லை. இது முகத்தில் மட்டுமல்ல கை, கால்களில் இருக்கும் முடிகளை நீக்க பயன்படுகிறது.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க :

மஞ்சளுடன் பப்பாளிக்காயை அரைத்து முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் பொலிவு பெறும்

கஸ்தூரி மஞ்சளை பாலாடையுடன் சேர்த்து முகத்தில் பூசி வர, முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மறையும். கஸ்தூரி மஞ்சள் மூலிகை கடைகளில் அரைத்தே விற்பனை செய்யப்படுகிறது.

பசும்பாலுடன் பாசிப்பயறு தோலை கலந்து அரைத்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறைந்து முகம் பளபளக்கும்.

சாதாரண மஞ்சளை இரவு தூங்கும் போது அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு, காலை இளஞ்சூடான நீரில் கழுவி வந்தால் படிப்படியாக முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

ஜொலி ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்! பாட்டிகளின் இயற்கை அழகுக்கு என்ன காரணம் தெரியுமா?

nathan

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika

வதந்தி குறித்து கடும்கோபத்தில் கயல் ஆனந்தி கூறிய பதில்..திருமணத்திற்கு முன் காதலா?

nathan

முக பருக்கள் முழுவதையும், அதனால் உண்டான வடுக்களை முற்றிலுமாக குணப்படுத்த இதை முயன்று பாருங்கள்…

sangika

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

nathan

உதடு சிவக்க

nathan

10 நிமிடத்தில் ப்ளீச்சிங் செய்த மாதிரியான முகம் வேண்டுமா? அப்ப இந்த ஒரு ஃபேஸ் மாஸ்க் போடுங்க…

nathan

கரும்புள்ளியை ஒரே வாரத்தில் மறையச் செய்யும் ஒரு பொருள் என்ன தெரியுமா?

nathan