வீட்டில் இருந்து செய்ய கூடிய சுவையான தமிழ் நாட்டு ஸ்டைல் வாழைக்காய் பொறியல் செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
2 வாழைக்காய்
2 டீஸ்பூன் எண்ணெய்
½ தேக்கரண்டி கடுகு
½ தேக்கரண்டி சீரகம் அல்லது ஜீரா
1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
1 சிவப்பு மிளகாய்
1 துண்டு பெருங்காயம்
¾ முதல் 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
½ தேக்கரண்டி மிளகாய் தூள்
1/8 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் கொத்தமல்லி
½ தேக்கரண்டி உப்பு அல்லது தேவைப்படும்
செய்முறை
வாழைக்காய் இரண்டினை தோள் சீவி சிறிய வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் மற்றும்உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
சேர்த்த பொருட்களை சிறிது நேரம் எண்ணெய்யில் வைக்கவும். அதில் சிறிது கறிவேப்பிலையை சேர்க்கவும்.
அதில் மஞ்சள், சாம்பார் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.
நன்றாக கலந்து கொள்ளவும்.
அதில் வெட்டி வைத்த வாழைக்காயை சேர்க்கவும்.
அதனை நன்கு வேக வைக்கவும்.
வெந்தவுடன் சிறிதளவு உப்பு சேரத்து பரிமாறவும்.