26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
castoroil
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வறட்சியான சருமத்திற்கு 10 கன கச்சிதமான டிப்ஸ்!!

நம்முடைய சருமத்தில் எத்தனையோ வகை இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு சருமம் அடிக்கடி உலர்ந்து போவது தான் பெரும் பிரச்சனையே! அதை அடிக்கடி ஈரப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், சருமம் மேலும் மேலும் காய்ந்து போய் வெடிப்புகள் தோன்றி படாதபாடு படுத்திவிடும்.

பொதுவாக குளிர் காலத்தில் தான் சருமம் மிகவும் காய்ந்து போய் தொல்லை கொடுக்கும். நல்ல தரமான சோப்புக்களையும், ஃபேஷ் வாஷ்களையும் பாடி வாஷ்களையும் உபயோகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

அதிக செலவு இல்லாமல், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நாம் நம் சருமத்தை உலர்ந்து போகாமல் காத்துக் கொண்டு, அதை மிருதுவாகவும் பளபளப்பாகவும் கூட வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட 10 எளிமையான டிப்ஸ் இதோ…

எண்ணெய் பேக்

பொதுவாகவே அனைத்து எண்ணெய்களுக்கும் சுத்தப்படுத்தும் பண்புகள் உண்டு. குறிப்பாக குளிர் காலத்தில் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவையைப் பயன்படுத்துவது உலர்ந்து போன சருமத்திற்கு நல்லது. 3 பங்கு ஆலிவ் எண்ணெயுடன் ஒரு பங்கு விளக்கெண்ணெயைக் கலந்து முகத்தில் தடவி, பின்னர் சுடுநீரில் நனைத்து பிழிந்த சூடான டவல் கொண்டு நன்றாகத் துடைத்து எண்ணெயை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதிலும் இந்த எண்ணெய்க் கலவையை சிறிது கொதிக்க வைத்து உபயோகித்தால் அதிக பலன் கிடைக்கும். சருமம் மிருதுவாகும்.

தேன் பேக்

உலர்ந்த சருமத்திற்கு தேன் ஒரு அருமருந்தாகும். தேனுடன் ஆரஞ்சுச் சாற்றைக் கலந்து சருமத்தில் தேய்க்க வேண்டும். பிறகு, ஒரு 10 நிமிடங்கள் கழித்து தேய்த்த பாகங்களை நன்றாகக் கழுவினால் சருமம் பட்டுப் போல் பளிச்சிடும். சருமத்திலுள்ள சுருக்கங்களும் நீங்கியிருக்கும்.

முட்டை பேக்

ஆரோக்கியமான சருமத்திற்கு புரதச்சத்து மிகுந்த முட்டை மிகவும் நல்லது. முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு ஸ்பூன் ஆரஞ்சுச் சாறு, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் தேன், சிறிது ரோஸ் வாட்டர், சில துளிகள் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அருமையான கலவையை தினமும் காலை குளிப்பதற்கு முன் சருமத்தில் தடவி, பின் அதை நன்றாகக் கழுவிக் குளிக்கவும். நல்ல பலன் நிச்சயம்.

சாக்லெட் பேக்

5 ஸ்பூன் கொக்கோ பவுடர், 5 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் சோள மாவு, 2 ஸ்பூன் பிசைந்த வெண்ணெய் ஆகியவற்றை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இக்கலவையை உலர்ந்த சருமங்களில் தடவி, அரைமணி நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். உலர்ந்த சருமம் பளபளப்பாக ஆகும். உருகிய சாக்லெட்டை சருமத்தில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கடலை மாவு பேக்

சருமத்தில் ஏற்படும் கோடுகளையும், சுருக்கங்களையும் போக்குவதில் கடலை மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. 2 ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு பால் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது எலுமிச்சைச் சாற்றையும் கலந்து நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சருமத்தில் பூசி, சிறிது நேரம் உலர வைக்கவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று மாறும்.

மாம்பழ பேக்

தோல் நீக்கப்பட்ட மாம்பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 3 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலந்து, அக்கலவையை சருமத்தில் தடவ வேண்டும். அரைமணி நேரம் கழித்து அதைக் கழுவி விட்டுப் பார்த்தால், சருமம் பளபளவென்று மின்னுவதைக் கண்கூடாகக் காணலாம்.

முட்டை மற்றும் எண்ணெய் மாஸ்க்

முட்டையுடன் ஒரு ஸ்பூன் தேனைச் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ரோஸ் வாட்டரையும் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பின் இக்கலவையை முகத்தில் தேய்த்து உலர வைக்கவும். அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

வாழைப்பழ மாஸ்க்

தோல் நீக்கப்பட்ட 2 வாழைப்பழங்களை மிக்ஸியில் நன்றாக அரைத்து அல்லது கைகளினாலேயே நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் நன்றாகத் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

அவகேடோ மாஸ்க்

அவகேடோ பழத்தை நன்றாக அரைத்துக் கொண்டு, அதனுடன் தயிரையும், ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து, உலர்ந்த சருமத்தில் தடவி கழுவ வேண்டும். இதை அடிக்கடி தொடர்ந்து செய்து வந்தால் சருமம் ஈரப்பதத்துடன் பளிச்சிடும்.

தயிர் பேக்

2 ஸ்பூன் தயிருடன் தேனைக் கலந்து, முகத்தில் பூச வேண்டும். பின், ஒரு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Related posts

சரும அலர்ஜியை போக்க வழிகள்

nathan

சரும சுருக்கத்தை தடுத்து என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்

nathan

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி

nathan

டிப்ஸ்…டிப்ஸ்…

nathan

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan

பார்லர் அழகு வீட்டிலிருந்தபடியே பெறலாம்!!உங்களுக்காக சின்ன சின்ன அழகுக் குறிப்புகள்!!

nathan

கழுத்தின் இளமை ரகசியம்,

nathan

அழகின் பெயரால் அரங்கேற்றப்படும் அபத்தங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தை பொலிவாக்கும் மைசூர் பருப்பு….

nathan