24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
hairgrowth
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கூந்தல் பிரச்சனைகளுக்கு உருப்படியான தீர்வு தரும் உருளைக்கிழங்கு!!!

உலகம் முழுவதிலும் பெரும்பாலான மக்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களில் அரிசி, கோதுமை மற்றும் சோளத்திற்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு 4 ஆவது தனி இடத்தைப் பெற்றுள்ளது.

சிலருக்கு உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற போதிலும், உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட சைடு டிஷ்களுக்கு ஈடு, இணை எதுவும் இருக்காது.

இத்தகைய உருளைக்கிழங்கு நம் உடல் அழகைப் பராமரிப்பதிலும் பெரும் பங்கை வகிக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? குறிப்பாக, நம் கூந்தல் அழகிற்கு உருளைக்கிழங்கு பெரிதும் பயன்படுகிறது. இப்போது உருளைக்கிழங்கு கூந்தல் பராமரிப்பிற்கு எவ்வாறு உதவுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கிய கூந்தலுக்கு…

உருளைக்கிழங்கைத் தண்ணீருடன் சேர்த்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் ஒரு முட்டை மற்றும் தயிரையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலை முடியின் வேர்ப்பகுதி மற்றும் முடியின் அனைத்துப் பகுதியிலும் தடவி, 20 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி 20 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

கருகரு கூந்தலுக்கு…

நரைமுடி உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவும். உருளைக்கிழங்கின் தோலை மட்டும் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து, 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, அந்த நீரை ஷாம்புவுடன் கலந்து தலைமுடியில் தடவி, பிறகு நீரில் கழுவ வேண்டும். ஒருமுறை விட்டு ஒருமுறை தலைக்குக் குளிக்கும் போது இதைக் கடைப்பிடித்து வந்தால், உங்கள் கூந்தல் கருகருவென்று இருக்கும்.

முடி உதிர்வு நிற்பதற்கு…

உங்களுக்கு முடி நிறைய உதிர்கிறதா? இந்த முறையைக் கடைப்பிடியுங்கள். 3 ஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறு, 3 ஸ்பூன் கற்றாழைச் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து தலைமுடியின் வேர்களில் தடவவும். சுமார் 2 மணி நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு முடியைக் கழுவவும். வாரத்திற்கு இரு முறை இது போல் செய்து வந்தால், முடி உதிர்வது விரைவில் நிற்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு…

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் உருளைக்கிழங்கை நன்கு சுத்தமாக கழுவி, தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

Related posts

தினமும் தலைக்கு ஏன் ஷாம்பு போடக்கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க சூப்பர் டிப்ஸ்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பொருள் போதும்…!

nathan

தலை முடி உதிர்கின்றது என்ற கவலையா? பாட்டி வைத்தியம் ‘ட்ரை பண்ணுங்க’-நிச்சயம் பலன் உண்டு !!

nathan

முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் நல்ல பளபளப்பாகவும் மாற இதை செய்யுங்க!…

nathan

நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

முடி உதிர்வைத் தடுக்கும்… கூந்தலைப் பளபளப்பாக்கும் வெங்காயம்!

nathan