25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
images 8
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

புருவ அடர்த்திக்குகாரணம் என்ன?

அடர்த்தியான புருவங்களே, பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சிலருக்கு புருவங்கள் அதீத வளர்ச்சி பெற்றிருக்கும். சிலருக்கு வளர்ச்சி மிககுறைவாக காணப்படும்.
இது போன்ற பெண்களுக்கு, புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் துணையாக இருக்குகிறது. அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து, சில துளிகள் அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் ரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.


எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பு, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாக கிள்ளி விட்டால், புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வழி செய்கிறது. தினசரி குளிப்பதற்கு முன்பாக, புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை தடவி, மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம்.
புருவங்களை எப்போதும், திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும். பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம்.
அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது, அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் அடர்த்தியாக, கன்னாபின்னாவென வளரும்.
கண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, யிலாங் யிலாங் மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிக சிறந்தவை.

Related posts

கண்ணிமைகள் வளர நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!

nathan

முகப்பரு தழும்பு மாற!

nathan

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

மூக்கிட்கான அழகு குறிப்புகள்

nathan

உதடுகள் சிவப்பழகை பெற இதை செய்யுங்கள்!…

sangika

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

கருவளையத்தை போக்க எளிய முறைகளைப் பின்பற்றினால் போதுமானது… முயன்று பாருங்கள்

nathan

பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து!! சந்தேக புத்தியால் நடந்த விபரீதம்

nathan

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan