24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
03 1441267301 1 almondoil
முகப் பராமரிப்பு

சீழ் நிறைந்த பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் எண்ணெய்கள்!!!

பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் பருக்கள். அதிலும் சீழ் நிறைந்த பருக்கள் வந்தால், அதுப்போக 3-4 நாட்களாவது ஆகும். அதுமட்டுமின்றி, இந்த வகையான பருக்கள் காய்ந்து உதிர்ந்த பின் கருமையான தழும்புகளை ஏற்படுத்தும். மேலும் இந்த தழும்புகள் அவ்வளவு எளிதில் போகாது.

ஆனால் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க ஒருசில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்தால், விரைவில் போக்கலாம். அதிலும் தினமும் அந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் போய்விடும். சரி, இப்போது பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்க உதவும் எண்ணெய்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாம் எண்ணெய்

03 1441267301 1 almondoil
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், அதனைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தால், பருக்கள் விரைவில் போய்விடும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடிக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி இறக்கி, குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் கருமையான தழும்புகள் உள்ள இடத்தில் தினமும் தடவி வர, தழும்புகள் மறையும்.

லாவெண்டர் ஆயில்

ஒரு டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெயில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் பருக்களால் வந்த தழும்புகளின் மீது தடவினால், நல்ல பலனைக் காணலாம்.

புதினா ஆயில்

புதினா எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் பொருந்தாது. குறிப்பாக சென்டிசிவ் சருமத்தினருக்கு ஏற்றது அல்ல. மேலும் இந்த எண்ணெயின் ஒரு துளியை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் லேசாக அரிப்பு ஏற்படக்கூடும். எனவே கவனமாக இருக்கவும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தில் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகள் மட்டுமின்றி, கரும்புள்ளிகள் மற்றும் வறட்சியும் நீங்கும்.

ஆலிவ் ஆயில்


ஆலிவ் ஆயில் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. எனவே இந்த எண்ணெயை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகம் பொலிவோடு இருப்பதைக் காணலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் கூட பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்க வல்லது. அதற்கு இந்த எண்ணெயை தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

கடலை எண்ணெய்


கடலை எண்ணெயும் மிகவும் சிறப்பான சருமத்தைப் பராமரிக்க உதவும் ஓர் எண்ணெய். இதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தலும் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.

Related posts

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே லிப் ஸ்க்ரப் தயாரிக்கலாம்!

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…

sangika

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

sangika

அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஒரே வாரத்தில் முகம், கை, கால்களில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

how get clean acne free face..பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

உங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா? அதை மறைக்க சில டிப்ஸ்…

nathan