25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
groom men
தலைமுடி சிகிச்சை

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்…

ஆண், பெண் இருவருக்குமே முடி பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். இதில் பெண்கள் பொதுவாக தங்களது கூந்தலின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்களோ தங்களது முடியை கண்டு கொள்ளவேமாட்டார்கள். அப்படி பராமரிக்காமல் விடுவதால் தான், இன்றைய காலத்தில் நிறைய ஆண்களுக்கு விரைவிலேயே வழுக்கை வருகிறது.

இருப்பினும் அதனை பல ஆண்கள் உணர்ந்த தங்களின் முடியை பராமரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பலரிடம் கேட்டு, அவற்றை பின்பற்றி வருகின்றனர். இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலால் முடியானது விரைவில் பாதிக்கப்படுகிறது. இதனால் முடியை பாதுகாக்கும் வண்ணம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினால், முடி அதிகம் உதிர ஆரம்பிக்கிறது. ஆகவே பல ஆண்களுக்கு முடியை எப்படி பராமரிப்பது என்றே தெரியாமல் போகிறது.

ஆனால் உண்மையில் முடியை பராமரிக்க வேண்டுமானால், கடைகளில் விற்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தி தான் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாடம் ஒருசில செயல்களை மனதில் கொண்டு நடந்தாலே முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

முடியை நன்கு உலர்த்தவும்

பெரும்பாலான ஆண்கள் தினமும் தலைக்கு குளிப்பார்கள். அப்படி குளிப்பவர்கள், முடியை நன்கு உலர்த்திய பிறகு தான் வெளியே செல்ல வேண்டும். ஒருவேளை ஈரத்தலையுடன் வெளியே சென்றால், தூசிகளானது தலையில் மீண்டும் படிந்து, தலையில் பொடுகை உருவாக்கி, முடி உதிர்வை ஏற்படுத்தும்.

தினமும் ஷாம்பு பயன்படுத்தவும்

பலருக்கு தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பது நல்லதா கெட்டதா என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் தினமும் தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் நல்லது. இதனால் தலையில் தங்கியுள்ள தூசிகள் வெளியேறி, ஸ்கால்ப் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கெமிக்கல் வேண்டாம்

ஆண்கள் தலை முடிக்கு அதிக அளவில் கெமிக்கல்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் கெமிக்கல் அதிகம் நிறைந்த எந்த ஒரு பொருட்களையும் தலைக்கு தினமும் பயன்படுத்தாதீர்கள். இதனால் முடியின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

இறுக்கமான தொப்பி/ஹெல்மெட்

தற்போது அனைத்து ஆண்களிடமும் பைக் இருப்பதால், அவர்கள் வெளியே செல்லும் போது நிச்சயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியிருக்கும். அப்படி வெளியே செல்லும் போது அணியும் ஹெல்மெட்டானது மிகவும் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தலையில் அதிகமாக வியர்த்து, மயிர்கால்கள் ஈரப்பசையுடனேயே இருப்பதால், முடி உதிர்வது அதிகரித்துவிடும். எனவே எப்போம் ஹெல்மெட் அணியும் போது, காட்டன் துணியை தலைக்கு கட்டி அணியுங்கள். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் ஹெல்மெட் அணிவதை தவிர்த்திடுங்கள்.

ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறை

சரியான டயட் மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் அவசியம். அதற்கு பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதுடன், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மேலும் எப்போதும் மன அழுத்தமின்றி சந்தோஷமாக இருக்க வேண்டும். நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இவற்றாலும் முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

Related posts

பிசுபிசுப்பான கூந்தலா? வீட்டிலேயே ட்ரை ஷாம்பு தயாரிக்கலாம்!

nathan

பெண்களே முடி கிடு கிடுனு வளர இதை தடவுங்க…

nathan

முடி இழப்பை தடுக்கும் வழிகள்

nathan

சொட்டையில் முடி வளர வேண்டுமா? இந்த வைத்தியத்தை யூஸ் பண்ணுங்க!!

nathan

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடிப் பிளவுக்குத் தீர்வு!

nathan

இப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா? அப்ப இத படியுங்க….இனி அந்த கவலை எதுக்கு?

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

தலை முடி உதிரும் பிரச்சனைக்கு ஒரே வாரத்தில் நல்ல தீர்வு!….

nathan

ஈரத்தலைமுடியைச் சீப்பால் சீவவே கூடாது. உதிராமல் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

nathan