வடிவுக்கரசி அவர்கள் தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மூலம் 1978ஆம் ஆண்டு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 350 படங்கள் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்தவர். இன்றும் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் இவருடைய அசத்தலான நடிப்பு மட்டும்தான். அம்மா வேடமாக இருந்தாலும் சரி வில்லி வேடமாக இருந்தாலும் சரி அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். 1978 சினிமாவிற்கு அறிமுகமான ஒரு நடிகை இன்றும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் ஆச்சரியமான ஒரு விஷயம்.
சன் டிவியில் ஒளிபரப்பான 1998 குடும்பம் என்ற தொடரில் ஆரம்பித்த இவரது சின்னத்திரை பயணம் இன்று ஒளிபரப்பாகும் சீரியல்கள் வரை பயணித்து கொண்டிருக்கிறார் வடிவுக்கரசி. ஒரே நேரத்தில் சினிமாவிலும் சீரியலிலும் நடித்து அசத்தும் வடிவுகரசி தற்பொழுது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஜெகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கொரோனா விழிப்புணர்வு படம் ஒன்றில் மீன் வியாபாரியாக நடித்துள்ளார் வடிவுக்கரசி இந்த படத்தை கணேஷ் பாபு என்பவர் இயக்குகிறார். கொரோனா பரவலை தடுப்பதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு முறைகளை பற்றி இந்த விளம்பரம் விளக்கும். திரைத்துறையில் சீனியர் ஆர்டிஸ்ட் வடிவுகரசி அம்மாவை வைத்து விழிப்புணர்வு சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அந்த விளம்பரத்தின் இயக்குனர்.