25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
10 1418196985 3 b
அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க தொடை மற்றும் பிட்டம் அசிங்கமா கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

உங்கள் பிட்டம் மற்றும் தொடைப்பகுதி கருப்பாகவும், அசிங்கமாகவும் உள்ளதா? இப்படி அசிங்கமாக இருப்பதால் பல பெண்கள் நீச்சல் உடை அணிய கூச்சப்படுவார்கள். இப்படி தொடை மற்றும் பிட்டப்பகுதி கருமையாவதற்கு நாம் அணியும் பேண்டுகள் மட்டுமின்றி, பல்வேறு காரணிகளும் தான் காரணம். இதற்கு கடைகளில் விற்கப்படும் சருமத்தை வெள்ளையாக்கும் சில அழகு சாதனப் பொருட்களுள் சில நல்ல பலனைத் தந்தாலும், பெரும்பாலானவை எவ்வித பலனையும் தராமல் தான் இருக்கிறது.

 

ஆனால் இப்படி கருமையாக இருக்கும் தொடை மற்றும் பிட்டப் பகுதியை இயற்கை வழிகளின் மூலம் வெள்ளையாக்க முடியும். இப்போது நாம் தொடை மற்றும் பிட்டப்பகுதியை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த சில இயற்கை வழிகளைத் தான் பார்க்கப் போகிறோம்.

இந்த வழிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை வாரத்திற்கு 4-5 முறை முயற்சிப்பதன் மூலம், விரைவில் மாற்றத்தைக் காண முடியும். சரி, இப்போது அந்த இயற்கை வழிகளைக் காண்போமா!

அரிசி மாவு

பிட்டம் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க அரிசி மாவு பெரிதும் உதவிப் புரியும். ஏனெனில் இதில் சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளதால், இது எளிதில் தொடை மற்றும் பிட்டப் பகுதியில் உள்ள கருமையைப் போக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

* அரிசி மாவு – 1 டீஸ்பூன்

* பால் – 2-3 பால்

ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கருமையாக உள்ள தொடை மற்றும் பிட்டப் பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

சர்க்கரை

வெள்ளைக் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, சருமத்தில் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளின் தேக்கத்தால் ஏற்பட்ட கருமைப் படலத்தை நீக்கும். மேலும் இது சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும். எனவே இதன் உதவியாலும் தொடை மற்றும் பிட்டப்பகுதியில் இருக்கும் கருமையை எளிதில் போக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 2 டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் தேனை ஒன்றாக கலந்து, கருமையாக இருக்கும் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

ஆரஞ்சு தோல்

சிட்ரஸ் வகையைச் சேர்ந்த ஆரஞ்சு பழத்தின் தோலில் ஏராளமான அழகு நன்மைகள் அடங்கியுள்ளது. குறிப்பாக ஆரஞ்சு பழத்தின் தோலில் தான் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இனிமேல் ஆரஞ்சு பழத்தின் தோலை தூக்கி எறியாமல் உலர்த்தி பொடி செய்து, அதைக் கொண்டு சரும கருமையைப் போக்கி வெள்ளையாகுங்கள்.

எப்படி பயன்படுத்துவது?

* ஆரஞ்சு தோல் பொடி – 2 டீஸ்பூன்

* ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள தொடை மற்றும் பிட்டப்பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

எலுமிச்சை

ஆரஞ்சு பழத்தின் தோலைப் போன்றே எலுமிச்சையும் சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்தது. இப்பழத்தில் ப்ளீச்சிங் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. சரும கருமையைப் போக்க நினைப்பவர்கள், இந்த எலுமிச்சையைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், விரைவில் வெள்ளையாக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

* எலுமிச்சை சாறு

* தண்ணீர்

ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கருமையாக உள்ள பகுதியில் தடவி 10-15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் சீக்கிரம் வெள்ளையாகும்.

பப்பாளி

பப்பாளியில் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது. அதோடு பப்பாளியில் ப்ளீச்சிங் பண்புகளும் அடங்கியுள்ளது. ஆகவே சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும், வெள்ளையாகவும் மாற பப்பாளியைக் கொண்டு சருமத்தை பராமரித்து வாருங்கள்.

எப்படி பயன்படுத்துவது?

பப்பாளிப் பழத்தின் கனிந்த பகுதியை எடுத்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கருமையாக உள்ளது தொடை, பிட்டம், முகம் போன்ற பகுதிகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் சரும கருமையைப் போக்கலாம்.

வைட்டமின் ஈ ஆயில்

சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான சத்தாகும். இந்த வைட்டமின் ஈ பல்வேறு உணவுப் பொருட்களில் நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ சருமத்தில் இருந்து அழுக்குகள் மற்றும் தூசிக்களை நீக்கும். இதன் விளைவாக சரும நிறம் அதிகரிக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

கடைகளில் விற்கப்படும் வைட்டமின் ஈ ஆயில் கேப்ஸ்யூலினுள் உள்ள எண்ணெயை தனியாக ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அதனை பாதிக்கப்பட்ட பகுதியான கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் தூள்

பாரம்பரியமாக அழகைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்த மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் மஞ்சள். இது அனைத்து வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் ஓர் பொருளும் கூட. இதில் சருமத்திற்கு நன்மை அளிக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளதால், கருமையாக இருக்கும் பகுதியை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்துவதனால் நல்ல பலன் கிடைக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள தொடை மற்றும் பிட்டப் பகுதியில் தடவி 10-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், உங்கள் பிட்டம் மற்றும் தொடை அழகாக மாறும்.

தக்காளி

அழகு பராமரிப்பு பொருட்களுள் ஒன்று தான் தக்காளி. இந்த தக்காளி பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. முக்கியமாக பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவாக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் ப்ளீச்சிங் பண்புகள் ஏராளமாக உள்ளது.

எப்படி பயன்படுத்துவது?

நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, கருமையாக உள்ள தொடை மற்றும் பிட்டப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த முறையை உடலில் கருமையாக உள்ள மற்ற பகுதிகளிலும் பயன்படுத்தலாம். இதனால் நல்ல பலனைப் பெறலாம்.

Related posts

சுடிதாரில் அசத்தலாக தெரிய டிப்ஸ்

nathan

ராசிப்படி மற்றவர்கள் உங்களை விரும்ப காரணமாக இருக்கும் உங்களின் அந்த குணம் என்ன தெரியுமா?

nathan

ஐ அம் ரெடி.. 2-வது திருமணம்…? வெட்கத்தில் மீனா வெளிட்ட வீடியோ..

nathan

16 வயதில் தனியாக நிற்கும் நடிகையின் மகள்!

nathan

மேக்கப் இல்லாமல் நடிகை சில்க் ஸ்மிதாவின் இந்த அழகிய போட்டோவை பார்த்துள்ளீர்களா?

nathan

இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

12 ராசிக்கும் தமிழ் பிலவ வருட புத்தாண்டு பலன்கள்.. திடீர் அதிர்ஷ்டம் என்ன?

nathan

பித்த வெடிப்பு வராமல் தவிர்க்க

nathan