26.1 C
Chennai
Sunday, Aug 17, 2025
facewash
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஃபேஸ் வாஷ் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!!!

இன்றைய சூழ்நிலையில் ஃபேஷ் வாஷ் என்றால் பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். உங்கள் சருமப் பாதுகாப்பில் முகத்தை சுத்தம் செய்வது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆனால் சில சமயம் இதனைச் செய்யும் போது சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.

ஃபேஸ் வாஷ் செய்யும் போது சரியான முறைகளைப் பின்பற்றவில்லையென்றால் விளைவுகள் எதிர்மறையாக மாறலாம். இதுப்போன்ற தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

முகத்துடைப்புகள்

ஃபேஷியல் வைப்ஸ் எனப்படும் முகத்தைத் துடைக்கும் முறை நல்ல மற்றும் உபயோகமான ஒன்று. ஆனால் அடிக்கடி துடைப்பது அல்லது மிக அதிகமாகத் துடைப்பது, சருமத்தின் மெல்லிய அடுக்குகளை பாதிப்பதோடு. உங்களுடைய சருமத்தை மாசு மற்றும் சூரியக் கதிர்கள் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிடும். எனவே ஒரு நாளைக்கு இருமுறைக்கு மேல் முகத்தைத் துடைக்க வேண்டாம் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். தேவைப்பட்டால் முதத்தை நல்ல தண்ணீர் மற்றும் ஒரு நல்ல ஃபேஸ் வாஷைக் கொண்டு கழுவலாம்.

இதமான சுடுநீர்

மிகவும் சூடான நீராலோ அல்லது மிகவும் குளிர்ந்த நீராலோ முகத்தை கழுவ வேண்டாம். ஆனால் வெதுவெதுப்பான நீர் சருமத்தை எந்தவித பாதிப்புமின்றி கழுவ ஏற்றது.

ஒவரா பண்ணாதீங்க

சிலர் எப்போது பார்த்தாலும் முகத்தை தேய்த்துக் கொண்டோ அல்லது கழுவிக் கொண்டோ இருப்பார்கள். இதனால் முகத்திலுள்ள அழுக்கு போய்விடும் என்று நினைப்பார்கள் ஆனால் அது தவறு. உண்மையில் இதில் நன்மையை விட தீமையே அதிகம். இவ்வாறு செய்வது முகச் சருமத்திலுள்ள மென்மையான அடுக்குகளை பாழாக்கி சருமத்தை இறுகச் செய்துவிடும். நன்றாகச் சுத்தம் செய்யுங்கள் ஆனால் ஓவராக வேண்டாமே!

வறண்ட சருமப் பகுதிகளை நீக்குதல்

எக்ஸ்ஃபோலியேஷன் எனப்படும் இந்த முறையை பெரும்பாலானோர் கவனிக்கத் தவறுவர். சிலர் மிகவும் அதிகமாக அழுத்திச் செய்து முக சருமத்தை எரிச்சலுக்கு உள்ளாக்குவார்கள் அல்லது சிலர் முகத்தைத் தொடவே மாட்டார்கள். இதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சில சருமப் பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.

மேக்கப்பை கண்டிப்பா களையுங்க

இந்த விஷயம் பல காலமாகக் கூறப்பட்டு வந்தாலும், மக்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. நாளின் இறுதியில் மேக்கப்பை களைவது நமது தேர்வல்ல – கட்டாயமான ஒன்று. உங்கள் சருமம் மூச்சு விடுவதையும், அதை நீங்கள் போட்ட மேக்கப் மறைத்து காற்றைப் புக விடாமல் அது திணறுவது போலவும் நினைத்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு இதன் முக்கியத்துவம் புரியும்.

எனவே மேற்கூறிய உக்திகளை பின்பற்றி புத்துணர்ச்சியான, மென்மையான மற்றும் தூய சருமத்தைப் பாதுகாக்கத் தவறமாட்டீர்கள் தானே !

Related posts

பனிக்கால சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு சம்பந்பட்ட முக்கிய குறிப்புகள்!இதை படிங்க…

nathan

சிவப்பழகு பெற வீட்டில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

சருமத்தில் உள்ள முகப்பருவினால் உண்டான குழிகளை நிமிடத்தில் சரி செய்யலாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரே நாளில் உங்க முகம் பளபளன்னு மாறனுமா?

nathan

பெண்களே அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க…

nathan

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

மஞ்சள் பேக் போடுவதால் அதிகரிக்கும் முக அழகை கவனித்துள்ளீர்களா?

nathan