ஆங்கில மருத்துவத்தில் Piles என்று அழைக்கப்படும் மூலநோய் மலக்குடல் மற்றும் ஆசனவாய் உள்ளே மற்றும் வெளியே உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படும்.
மலம் கழிக்கும் போது சிரமம், எரிச்சல் மற்றும் வலி ஆகியவை இதன் அறிகுறிகள், மலம் வெளியேறும் போது அதிக அழுத்தம் கொடுப்பதால் சில சமயங்களில் ரத்த போகும் ஏற்படலாம்.
மூல நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் அது குடல் புற்றுநோய் மற்றும் ஆசனவாய் புற்று நோய்க்கு வழி வகுக்கும் என்பது பயப்படக்கூடிய உண்மை.
மூல நோய் ஏன் வருகிறது?
மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்
பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல்.
உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம்.
கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவையால் ஏற்படுகின்றன.
மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும்.
அறிகுறிகள் என்ன?
மூல நோயின் அறிகுறிகள் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
சிகிச்சை முறைகள்
சில பாரம்பர்ய மருத்துவ முறைப்படி மூல நோயை எளிதாக குணப்படுத்த முடியும். அதன்படி வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே மூலம் என்னும் நோயை விரட்டி விட முடியும்.