26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
08 brandy chicken
அசைவ வகைகள்

சுவையான பிராந்தி சிக்கன் ரெசிபி

சிக்கன் ரெசிபியில் வித்தியாசமாக ட்ரை பண்ண ஆசையா? அப்படியானால் பிராந்தி சிக்கன் ரெசிபியை முயற்சி செய்யுங்கள். அதெப்படி பிராந்தி கொண்டு சிக்கன் சமைப்பது என்று கேட்கிறீர்களா? உண்மையிலேயே பிராந்தி கொண்டு சிக்கன் செய்தால், சிக்கனின் சுவையானது மிகவும் சூப்பராக இருக்கும்.

குறிப்பா இந்த சிக்கன் ரெசிபியை பேச்சுலர்கள் முயற்சிக்கலாம். அந்த மாதிரி இது மிகவும் ஈஸியாக இருக்கும். இங்கு அந்த பிராந்தி சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்)

மைதா – 1 1/2 கப்

சிக்கன் பிராத் – 1 கப்

பிராந்தி – 1/4 கப்

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

ஆலிவ் ஆயில் – 4 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.

சிக்கனானது பொன்னிறமானதும், அதில் 3/4 கப் சிக்கன் பிராத் ஊற்றி, சிக்கனை அதில் நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கன் பிராத்தானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு, வெண்ணெய், மிளகு மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் மைதாவை சேர்த்து, மீதமுள்ள சிக்கன் பிராத் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்த பின்பு, பிராந்தியை ஊற்றி, 3 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான பிராந்தி சிக்கன் ரெசிபி ரெடி!!!

Related posts

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

nathan

சிக்கன் ரோஸ்ட்

nathan

சூப்பரான இறால் சுக்கா மசாலா

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

மீன் சொதி

nathan

சிம்பிளான… கடாய் பன்னீர்

nathan

வான்கோழி குழம்பு

nathan

சுவையான க்ரீமி கடாய் சிக்கன்

nathan