brocoli
அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உணவுகள்!!!

ஒருவர் சரியான உயரத்தில் இல்லாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று தான் சிறு வயதிலேயே எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது. ஏனெனில் சிறு வயதிலேயே நாம் எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான உணவுகளை உட்கொள்ளாவிட்டால், பின் எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், வளர்ச்சியானது திடீரென்று நின்றுவிடும்.

ஆகவே அதற்காக கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் மட்டும் போதாது, அனைத்து சத்துக்களையும் சரிசமமாக உட்கொண்டு வர வேண்டும். இருப்பினும் கால்சியத்தையும், அதனை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி நிறைந்ததையும் கொஞ்சம் அதிகம் சேர்த்து வர வேண்டும். இங்கு குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து அவற்றை உங்கள் குழந்தைகளின் உணவில் அன்றாடம் அதிகம் சேர்த்து வாருங்கள். சரி, இப்போது அந்த உணவுப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பால்

அனைவருக்குமே பாலில் கால்சியம் அதிகம் உள்ளது என்று தெரியும். ஆகவே அத்தகைய பாலை தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளை குழந்தைகளுக்கு மறக்காமல் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் எலும்பு மட்டுமின்றி, பற்களும் வலுவுடன் வளரும்.

சீஸ்

பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இன்றைய காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடித்த உணவுப் பொருளாக உள்ளது. இருப்பினும் இதனை அளவாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தைகளின் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிடும்.

முட்டை

குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை வேக வைத்து கொடுத்து வந்தால், கால்சியம் சத்து மட்டுமின்றி, புரோட்டீன், வைட்டமின் டி போன்ற சத்துக்களும் வளமாக கிடைக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் கூட எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உள்ளது. ஆகவே இதனையும் குழந்தைகளின் டயட்டில் சேர்த்து வாருங்கள்.

மத்தி

பொதுவாக மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மட்டும் தான் உள்ளது என்று தெரியும். ஆனால் மத்தி மீனில் கால்சியமும் அதிகம் உள்ளது. எனவே இதனை வாரம் 1-2 முறை குழந்தைகளின் உணவில் சேர்த்து வாருங்கள்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றில் மட்டுமின்றி அனைத்து கீரைகளிலும் கால்சியம் உள்ளது. ஆகவே வாரத்திற்கு மூன்று முறை குழந்தைகளுக்கு கீரைகளை சமைத்து கொடுங்கள்.

தயிர்

தயிரும் பால் பொருட்களில் ஒன்று. ஆகவே தினமும் அவர்களின் உணவில் தயிரை மறக்காமல் சேர்த்து வாருங்கள்.

ஆரஞ்சு

கோடையில் ஆரஞ்சு பழம் விலை மலிவில் கிடைக்கும். ஆகவே குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தை அதிகம் வாங்கி கொடுங்கள். இதில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியமும் அதிகம் உள்ளது.

சோயா பால்

சில குழந்தைகளுக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்சனை இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு பாலுக்கு பதிலாக சோயா பால் கொடுக்கலாம்.

ஐஸ் க்ரீம்

குழந்தைகளுக்கு ஐஸ் க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெற்றோர்கள் இதனை சாப்பிட கொடுக்கமாட்டார்கள். இருப்பினும் ஐஸ் க்ரீம் பாலில் செய்யப்படுவதால், இதனை குழந்தைகளுக்கு அளவாக கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.

Related posts

திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

nathan

சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்க இதோ சில வழிகள்! ….

sangika

இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது!…

sangika

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

சூப்பர் டிப்ஸ்,,, கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால் எப்படி குறைப்பது?

nathan

Tamil Beauty Tips ,அழகுக் குறிப்புகள்,தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா

nathan

ட்ரை பண்ணி பாருங்க ! இதோ இயற்கையான மாதுளை “FACE PACK”

nathan

மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika