வைரஸால் பாதிக்கபட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75). சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம் ஹெல்த் கேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார்.அவருக்கு, எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – சாவித்திரிக்கு இன்று(செப்டம்பர் 5-ஆம் திகதி) திருமண நாள
இதனால் இவர்களின் திருமணம் ஐ.சி.யூ-வில் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன் படி பிரத்யேகமாக கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.,வில் வைக்கப்பட்டது. டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி.- சாவித்திரி இருவரும்,கேக் வெட்டி திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
எஸ்.பி.பி. படுத்து கொண்டே கேக் வெட்டினார்.இந்த நெகிழ்ச்சி நிகழு குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.