28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
hairgrowth
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சாத்துக்குடி ஜூஸின் மூலம் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!

சாத்துக்குடி ஜூஸானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. முக்கியமாக இதனை எனர்ஜியை அதிகரிக்கும் பானம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஜூஸில் கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் இந்த ஜூஸை குடித்தாலே உடல் புத்துணர்ச்சி அடைந்துவிடும். இத்தகைய ஜூஸானது கூந்தலுக்கு மிகவும் நல்லது என்பது தெரியுமா?

ஆம், சாத்துக்குடி ஜூஸானது கூந்தலின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு அந்த சாத்துக்குடி ஜூஸினைக் கொண்டு கூந்தலை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று பார்ப்போம்.

மென்மையாக்க உதவும்

சாத்துக்குடி பழத்தை சாறு எடுத்து, அத்துடன் தயிர் அல்லது க்ரீம் சேர்த்து கலந்து முடிக்கு தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தலானது மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.

வலிமையை அதிகரிக்கும்

சாத்துக்குடி ஜூஸினை நேரடியாக கூந்தலுக்கு தடவி வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது கூந்தலின் வலிமையை அதிகரிக்கும். குறிப்பாக கூந்தல் அதிகம் உதிர்ந்தால், சாத்துக்குடி சாற்றினை நன்கு வடிகட்டி, பின் தலைக்கு தடவி ஊற வைத்து பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தலின் வலிமை அதிகரிக்கும்.

நரைமுடியைப் போக்கும்

நரைமுடியால் அவஸ்தைப்படுபவர்கள், ஹென்னா பவுடரை சாத்துக்குடி ஜூஸ் சேர்த்து கலந்து, தலை முடிக்கு தடவி ஊற வைத்து குளித்தால், சாத்துக்குடியில் உள்ள காப்பரானது முடியில் உள்ள மெலனின் அளவை அதிகரித்து, கூந்தலை கருமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

முக்கியமாக சாத்துக்குடி ஜூஸானது முடியின் வளர்ச்சி மற்றும் தரத்தை அதிகரிக்கும். எனவே கூந்தல் வளர்ச்சியில் பிரச்சனை உள்ளவர்கள், சாத்துக்குடி சாற்றினை தலைக்கு பயன்படுத்தி வருவது நல்லது.

குடிப்பதும் சிறந்ததே!

சாத்துக்குடி சாற்றினை குடிப்பதன் மூலமும் தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஏனெனில் இதனால் அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 கட்டளைகள்…

nathan

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயச்சாறு

nathan

ஒரே வாரத்தில் பொடுகைப் போக்கும் அற்புதப் பொருள் பற்றி தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்.. பெண்களுக்கு முகத்தில் முடிகள் வருவதற்கான காரணமும் – தீர்க்கும் இயற்கை வழிமுறையும்

nathan

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

தலைமுடியை தீர்மானிக்கும் வம்சம்

nathan

நரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா?..

nathan

முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் அரிய மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

nathan

பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்

nathan