25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
15671
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள்…!!

தேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முகப்பரு,

 

* 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும்.

* நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீக்கப்பட்டு, முதுமைக் கோடுகள் தெரிவது தடுக்கப்படும்.

* 1 டேபிள் ஸ்பூன் தேனில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி, பின் அவ் கலவையைக் கொண்டு சருமத்தை வட்ட சுழற்சியில் ஸ்கரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் பிறும் வெள்ளைப்
புள்ளிகள் அகற்றப்படும்.

* 1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் வறட்சியினால் ஏற்பட்ட சுருக்கங்கள் நீங்கி, சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.

* முக பொலிவை பெற தேன் பிறும் பால் கலந்த கலவையை முகத்திற்கு தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள மரணம்மடைந்த செல்களை போக்கி முகத்திற்கு புது
பொலிவை தருகிறது.

* ஆரஞ்சு பிறும் தேன் ஆகியவை பனிகால சரும பாதுகாப்புக்கு ஏற்றவை. வீட்டில் கார்ன் ப்ளவர் இருக்கும்ால் அதனுடன் தயிர் கலந்த கலவையை தினசரி
உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் பளபளக்கும்.

Related posts

உங்க சருமம் வெள்ளையாகணுமா அப்போ இதை 2 முறை முயன்று பாருங்கள்!

nathan

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க உதவும் சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்கள்!

nathan

குங்குமப்பூ தரும் அழகு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிளாக் ஹெட்ஸ் இயற்கை முறையில் நீக்கலாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!!

nathan

Kadalai Maavu Beauty Tips in Tamil!!

nathan

அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்……

sangika

எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் வழிகள்

nathan

2 வாரத்தில் முகத்தில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan