எண்ணெய் பசையான, பிசுபிசுப்பான கூந்தல் என்பது இன்றைய கால பெண்களின் பரவலாகப் காணப்படுகின்ற ஒரு பிரச்சினை ஆகும்.
எண்ணெய் பசையான மண்டைப் பகுதியிலிருந்தே எண்ணெய் பசைக் கூந்தல் உருவாகிறது.
ஏனெனில் மண்டைப் பகுதியில் உள்ள செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம்.
சிலருக்கு எண்ணெய் பசை கூந்தலின் விளைவினால், எண்ணெய் வழிகிற சருமப் பிரச்சினையும் சேர்ந்து கொள்வதுண்டு. இது சரும அழகையும் கெடுத்து விடுகின்றது.
இதனை ஒரு பல இயற்கை பொருட்கள் மூலம் சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முல்தானி மிட்டி – 3 முதல் 5 டீஸ்பூன் அளவு
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 5 டீஸ்பூன்
நெல்லிக்காய் பொடி – 2 டீஸ்பூன்
செய்முறை
முதிலில் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து 2 மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு கூந்தலை சுத்தம் செய்து ஸ்கால்ப் பகுதியில் முதலில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும்.
அதன் பிறகு கூந்தலின் நுனிவரை தடவி விடவேண்டும்.
பிறகு ஹேர் பேக் செய்து 1 மணி நேரம் வரை ஊறவிடவும். அதன் பிறகு வெறும் நீரில் அலசி மைல்டான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும்.
கூந்தலில் இரண்டுக்கும் அதிகப்படியான காலகட்டத்தில் எண்ணெய்ப்பசையை உறிஞ்சு தலை சருமத்துக்கு மிருதுவை தரும்.
அதே நேரம் கூந்தலை வறட்சியிலிருந்து காப்பாற்றி ஈரப்பதத்தை அளிக்க செய்யும். கூடுதலாக கூந்தல் வளர்ச்சிக்கும் உதவி செய்யும்.