625.500.560.350.160.300.053.800.900.1 5
Other News

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குடற்புண்ணை குணப்படுத்தும் இயற்கை சக்தி கொண்ட அற்புத கீரை!

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர். இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

சத்துக்கள்
  • சுண்ணாம்புச் சத்து – 60 மி.கி.
  • இரும்புச் சத்து – 9 மி.கி.
  • மணிச்சத்து – 15 மி.கி.
  • வைட்டமின் ஏ – 6000 த
  • வைட்டமின் சி – 13 மி.கி.
  • தயாமின் – 0.03 மி.கி.
  • ரைபோஃபிளேவின் – 0.066

உணவுமுறை மாறுபாடு, வாயு சீற்றமடைதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன.

இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும்.

இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம்.

சுக்கான் கீரையின் இதர நன்மைகள்

மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும்.

இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.

அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது.

இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக யங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம்.

சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.

இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரையை நாமும் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.

Related posts

இந்த எழுத்துக்களில் உங்கள் மனைவியின் பெயர் தொடங்கினால்

nathan

செப்டம்பர் 1ல் பூமிக்கு வரும் ஏலியன்கள்!டைம் டிராவலர் கணிப்பு!

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு அவங்க காலேஜ் லவ்வரையே கல்யாணம் பண்ணிக்கும் அதிர்ஷ்டமிருக்காம்..

nathan

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

nathan

தளபதி 68 அப்டேட் கொடுக்க ரெடியான படக்குழு

nathan

ரூ.70 லட்சம் வருமான பணியில் அமர்ந்த எலக்ட்ரீஷியனின் மகன்!

nathan

செம்ம ரொமென்ஸ்.. நடிகர் கவின் மற்றும் மோனிகா திருமண புகைப்படங்கள்

nathan

“இன்னைக்கு நைட்டு இவர் கூட தான் படுக்க போறேன்..” – அபிராமி

nathan

இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ஆண்ட்ரியா!!

nathan