24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
25 rihanna
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கான பிகினி வேக்ஸிங் முறைகளில் சிறந்தது எது?

தங்களுடைய அந்தரங்கப் பகுதிகளில் முளைத்துள்ள முடிகளை நீக்கி, அந்தப் பகுதிகளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதில் நிறையப் பெண்களுக்குக் குழப்பம் இருக்கும். முடிகளைக் களைவதற்கு சாதாரண ஷேவிங் முதல் வேக்ஸிங் வரை பெண்கள் பலவிதமான முறைகளைக் கையாளுகின்றனர். மேலும் எபிலேட்டர், ஹேர் ரிமூவல் க்ரீம் போன்றவற்றையும் பின்பற்றுகின்றனர்.

ஆனால் இவற்றில் வேக்ஸிங் முறையைப் பயன்படுத்தி முடியை நீக்கும் பழக்கம் இன்று பல பெண்களிடம் உள்ளது. இந்த வேக்ஸிங் முறையிலும் பல ஸ்டைல்கள் உள்ளன. அது போன்ற சில ஸ்டைல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பிகினி வேக்ஸ்

பிகினி உடை போன்ற ஜட்டிகளுக்கு வெளியேயும் நீட்டிக் கொண்டிருக்கும் முடிகளை வேக்ஸ் மூலம் முழுவதுமாக மழித்து விட்டு, உள்பகுதியில் உள்ள முடிகளை டிரிம் செய்யும் முறைதான் பிகினி வேக்ஸ் ஆகும். பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். பல பியூட்டி பார்லர்களிலும் இதை செய்து கொள்ளலாம்.

பிரேசிலியன் வேக்ஸ்

அந்தரங்கப் பகுதியிலும், பின்புறத்திலும் உள்ள முடிகளை முழுவதுமாக நீக்குவதற்குப் பெயர் தான் பிரேசிலியன் வேக்ஸ் ஆகும். ஹாலிவுட் வேக்ஸ் என்றும் இப்போதெல்லாம் கூறப்படும் இந்த முறையைப் பயன்படுத்தும் போது சிறிது வலி இருக்கும்; அதைப் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க, இம்முறையில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரெஞ்சு வேக்ஸ்

இந்த முறையைப் பயன்படுத்துகையில், வுல்வாவுக்கு மேல் பகுதியில் மட்டும் சிறிது முடிகளை விட்டுவிட்டு, மற்ற அனைத்தும் வேக்ஸ் மூலம் நீக்கப்படும். விடுபட்ட அந்த முடிகளுக்கு ‘லேண்டிங் ஸ்டிரிப்’ என்று பெயர். சில பெண்கள் இதை முக்கோண ஸ்டிரிப்பாகவும் அழகுபடுத்திக் கொள்வார்கள்.

Related posts

சரும சுருக்கங்களுக்கு குட் பை சொல்ல இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்க

nathan

இளமையுடனும், அழகுடனும் இருக்க வேண்டும் எனில் நெல்லிகாய் சாப்பிடுங்க…

nathan

வறண்ட சருமப் பிரச்சனையா? இதோ இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

சரும சுருக்கத்தை போக்கும் மஞ்சள்

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ

nathan

‘இந்த’ ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான மின்னும் சருமத்தை தருமாம்…!

nathan

புத்துணர்ச்சி தரும் ஸ்பா வீட்டிலேயே செய்யலாம்

nathan

அக்குள் கருமையை நீக்கும் அசத்தலான டிப்ஸ்

nathan

சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பயனுள்ள தகவல்கள்!!

nathan