25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1477647259 6288
கால்கள் பராமரிப்பு

கொலுசு அணிவதற்கான காரணங்கள்

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.

தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை.

நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம்.

குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

மேலும் பெண்கள் அழகாக தங்களை வைத்துக்கொள்ளும் அழகு பொருட்களில் இந்த கொலுசுவும் ஒன்று1477647259 6288

Related posts

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

nathan

பாத வெடிப்பை மறைய வைக்கும் குறிப்புகள்

nathan

வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்து பாதத்தில் உள்ள கருமையை நீக்க சில வழிமுறைகள் இங்கே…

nathan

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

உரோமத்தை நீக்கும் முறைகள்!..

sangika

பாத வெடிப்பு நீங்க

nathan

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்!…

sangika

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்

nathan

குதிகால் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan