22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.800.9 14
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான முறையில் குளித்தல் எப்படி?

காலையில் எழுந்தவுடன் நாம் செய்ய வேண்டிய விஷயங்களை நம் முன்னோர்கள் வகுத்து சொல்லியிருக்கின்றனர்.

காலையில் எழுந்தவுடன் குளிக்க வேண்டும். குளித்தலின் போது நம் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு உடலில் உள்ள வெப்பம் வெளியேறி உடலை குளிர்விக்கிறது.

தற்போதைய பெண்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பதில்லை. அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு குளித்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

குளியல் என்பது முகம் வரை குளிப்பதையே குறிக்கிறது. தலை முதல் முழுமையாக குளிப்பதையே குளித்தல் என சொல்லப்படுகிறது.

தினமும் குளித்தலை மேற்கொண்டால் சளி பிடிக்கிறது, தும்மல் வருகிறது, சைனஸ் பிரச்சனை வந்துவிடும் என நாமாகவே கூறிக்கொள்கிறோம்.

தலைக்கு குளிப்பதை இந்த காலத்தில் பெரும் வேலையாக கருதுகிறார்கள். நாம் இரவு முழுவதும் தூங்குகிறோம்.

அந்த நேரத்தில் நம் உடல் சமநிலையில் இருக்கும். தூங்கும்பொழுது நம் உடலில் உள்ள உஷ்ணமும் சமநிலையில் இருக்கும்.

நாம் காலையில் எழுந்தவுடன் குளித்தால் உடலில் உள்ள உஷ்ணம் முழுமையாக வெளியேறிவிடும்.

உஷ்ணம் நம் உடம்பில் இருந்து மேல்நோக்கியே வெளியேறும். நாம் குளிக்க ஆரம்பிக்கும்போது காலில் முதலில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின் உடலை நனைக்க வேண்டும்.

உடலை நனைக்கும்போது உடலின் சூடு முழுவதும் மேல்நோக்கி அதாவது தலையை நோக்கி செல்லும்.

தினமும் தலைக்கு குளிக்காமல் முகம் வரை மட்டும் குளியலை மேற்கொண்டால் சூடு முழுவதும் தலையில் சேர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி நாம் சுறுசுறுப்பாக இருப்பது தடுக்கப்படும்.

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவர்கள் தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம் என்று கூறியவர்களை தவிர்த்து அனைவரும் அன்றாடம் தலையோடு குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உங்களுடைய உடலும் குளிர்ச்சியாக இருக்கும் , உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

Related posts

உங்கள் சருமத்தின் நிறத்தினை கூட்டச் செய்யும் 9 பொருட்கள்!

nathan

தெளிவான சரும அழகு பெற 5 வழிகள்

nathan

வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து ஃபேஸ் பேக்குகளை தயாரித்துப் பயன்படுத்த இத படிங்க!…

sangika

சர்க்கரை நோய் ஏற்படுத்தும் சருமப் பிரச்சனைகள் பற்றித் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சருமம் பளபளக்க வேண்டுமா?

nathan

ஆரோக்கியமான சருமத்தை பெற – Leaves that gives healthy skin

nathan

குளிப்பதற்கு முன் இந்த 3 விஷயங்கள் செய்தால் என்ன நன்மை என தெரியுமா

nathan

மையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

உடலிற்கு புத்துணர்வை தர இந்த எண்ணெய்களை வாரம் 1 முறை உபயோகிக்கலாம்.!!

nathan