29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
4 1575
சரும பராமரிப்பு

பெண்களே வீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

“உங்களுக்கு எந்த நடிகையை ரொம்ப பிடிக்கும்?” என்று கேள்வி கேட்டால் உடனே நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். உங்களுக்கு ஏன் அவர்களை ரொம்ப பிடிக்குதுனு கேட்டா, அவங்க ரொம்ப அழகாக இருக்கானு பதில் வரும். இங்கு அழகு என்பது தோலின் நிறமும் அது மின்னும் பொலிவும். சினிமா பார்க்கும் பல பெண்கள் தங்களுக்கும் அதேபோன்ற அழகான சருமம் வேண்டும் என்று நினைப்பார்கள்.

 

உண்மையில் சொல்லபோனால் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களைப் போன்ற மென்மையான தோலை யார்தான் இங்கு விரும்பவில்லை? ஆனால், முதலில் உங்களுடைய இந்த பிஸியான திட்டமிடப்பட்ட வாழ்க்கை முறையால் பலருக்கு பார்லருக்குச் செல்ல நேரம் இருப்பதில்லை. மேலும், அதற்கு செலவிடும் அதிக தொகையை பலர் விரும்புவதில்லை. ஆகவே, நீங்கள் ஏன் வீட்டில் ஏதாவது முயற்சி செய்யக்கூடாது? உங்கள் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சமையலறை பெட்டிகளுக்குள் நிறைய பயனுள்ள விஷயங்கள் உள்ளன. நீங்கள் ஏன் உங்கள் வீட்டை சொந்த பார்லராக மாற்றக்கூடாது?

அழகு ஆரோக்கியம்

அழகு அதிகரிப்பதில் நமது தோல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்துடன் சேர்ந்து உங்கள் அழகை பேணிகாக்கலாம். ஆரோக்கியமான சருமம் நாம் தற்போது இருப்பதை விட பத்து வருடங்களுக்கு முன்பு உள்ளதை போன்று இளமையாக தோற்றமளிக்கும்.

இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். குறிப்பாக பெண்கள் இதில் அதிகமாக விருப்பம் செலுத்துவார்கள். இதில், பலருக்கு செயற்கையான கெமிக்கல் நிறைந்த பொருட்களை தனது சருமத்துக்கு பயன்படுத்த அச்சம் கொள்வார்கள். அப்படி இருந்தால், கவலையை விடுங்க… இயற்கையாகவே அழகிய சருமத்தைப் பெறுவதற்கு வீட்டு வைத்தியம் செய்ய சில எளிய முறையை காணலாம்.

உதவிக்குறிப்புகள்

நீங்கள் வீட்டில் வைத்தியம் செய்வதற்கு முன், சில அத்தியாவசியமான செயல்களை செய்ய வேண்டும். இது எந்த குறைபாடுகளும் இல்லாத தோலுக்கான செயல்கள். தூங்க செல்வதற்கு முன்பு தங்களுடைய முக ஒப்பனை முழுவதுமாக அகற்றுவது இயற்கையாக ஒளிரும் சருமத்தின் முதல் முக்கிய படியாகும். இளமையாக தோற்றமளிக்கும் சருமத்தைப் பெறுவதற்கு சருமத்தை எப்போதும் சுத்தப்படுத்துதல், டோனிங் செய்தல் மற்றும் ஈரப்பதமாக்குவது முக்கியம்.

காலப்போக்கில் உருவாகும் அனைத்து இறந்த சரும செல்கள் உரித்தல் மற்றொரு முக்கியமான படியாகும். எனவே வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சருமத்தை நன்றாக துடைக்க வேண்டும். சூரியனிலிருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். அழகான சருமத்தை வைத்திருக்க முகமூடிகள் நிறைய உதவுகின்றன. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் பச்சை காய்கறிகளும் பழங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் சருமத்தை இயற்கையாகவே அழகாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கும்.

 

செய்யக்கூடாதவை

சந்தையில் கிடைக்கும் எந்த அழகுசாதனப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் சருமத்திற்கு அதிக அளவில் தீங்கு விளைவிக்கும். எனவே நன்கு சோதிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். கோடை காலத்தில் மாய்ஸ்சரைசரைத் தவிர்க்க வேண்டாம். உங்கள் சருமம் வறண்டதாக இல்லை என்றாலும், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை சமப்படுத்த ஈரப்பதமூட்டுதல் முக்கியமானது.

நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை நீங்கள் தேர்வு செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். சூரியனின் கதிர்கள் மிகவும் வலிமையானவை. அது உங்கள் சருமத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வீட்டு வைத்தியம்

அழகான சருமம் பெறுவது ஒவ்வொரு பெண்ணின் கனவு. சருமத்தை ஒளிர செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய பணத்தை செலவு செய்து கடினமாக முயற்சி செய்கிறோம். தூசு, மாசு மற்றும் அழுக்கு, வானிலை மாற்றங்கள் மற்றும் நமது அழகுசாதனப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் என அனைத்தும் நமது சருமத்தை பெரிதும் பாதிக்கின்றன. இயற்கையாகவே அழகான சருமத்தைப் பெற வீட்டில் தயாரிக்கக்கூடிய சில எளிமையான குறிப்புகளை பற்றி காணலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழங்கள் உங்கள் முகத்திற்கு ஒரு சிறந்த வேலை செய்கின்றன. வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் பாலுடன் கலந்து பிசைந்து கொள்ளவும். பின்னர், அந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை மசாஜ் செய்யவும். பின்னர் முகத்தை கழுவி விடவேண்டும். இப்போது நீங்கள் மிகவும் விரும்பிய பளபளப்பான சருமத்தை பெறலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் கருமையான இடங்களிலும் வேலை செய்கிறது.

 

வெள்ளரி

சருமத்திற்கு கூடுதல் பிரகாசத்தை தரும் மற்றொரு இயற்கை வழி வெள்ளரி. ஒரு வெள்ளரிக்காயை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இந்த ப்யூரியை ஒரு பருத்தி துணியால் வடிகட்டி, சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த சாறை ஒரு பாட்டில் ஊற்றி அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். சிறிய காட்டன் பேட்டைப் பயன்படுத்தி இந்த பேஸ்ட்டை உங்கள் முழு முகத்திலும் தடவவும். இதன் விளைவாக கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

எலுமிச்சை

எண்ணெய் முகம் கொண்டவரா நீங்கள்? அப்படினா கவலையை விடுங்க. நான்கு டேபிள் ஸ்பூன் களிமண் நீர், இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், எலுமிச்சை கூழ் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு இயற்கை ஃபேஸ் மாஸ் தாயாரிக்கலாம். அதை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் சூடான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். எண்ணெய் முகம் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை தரும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயுடன் உப்பை கலந்து மிகவும் பயனுள்ள ஒரு முக மாஸ்கை தயாரிக்கலாம். இது உங்கள் முகத்திலிருந்து இறந்த சரும செல்களை மெதுவாக வெளியேற்ற உதவும். கிரானுலேட்டட் சர்க்கரையுடன் உப்பை மாற்றுவதன் மூலமும் இதே விளைவைப் பெறலாம்.

 

முட்டை

சூரிய ஒளியால் முகத்தில் ஏற்படும் கருமைக்கு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் இரண்டு டீஸ்பூன் தேனை கலந்து பயன்படுத்தலாம். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடவி ஐந்து நிமிடங்கள் ஊறவையுங்கள். பின்னர் லேசான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தை நன்கு கழுவுங்கள். இது உங்கள் நிறமியைக் குறைக்க உதவும், மேலும் இது இயற்கையான பிரகாசத்தை உங்களுக்கு வழங்கும்.

தேன்

ஒரு சிலருக்கு முகத்தில் முடி வளரும். அந்த முடி வளர்ச்சியை குறைக்க இந்த எளிய தீர்வை முயற்சி செய்யலாம். 10 மில்லி எலுமிச்சை சாறை 40 மில்லி தேனில் கலந்து ஒரு கலவையை தயார் செய்யவும். ஒரு பருத்தி துணியை எடுத்து இந்த கலவையை முகத்தில் முடி வளரும் இடத்தில் தேய்க்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவிவிடவேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

கண்களுக்கு அழகு சேர்ப்பது

கண்களைச் சுற்றியுள்ள தோல் வயதானதை போன்ற அறிகுறிகளைக் காட்டுகிதா? கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை அகற்ற சில எளிய தீர்வுகளை பார்க்கலாம். இரண்டு வெள்ளரிக்காய் துண்டுகளை வெட்டி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். இது கண்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் கரு வளையங்களை போக்கும்.

உங்கள் சமையலறை மூலப்பொருளில் ஒன்று உருளைக்கிழங்கு. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, அதை நன்றாக கழுவி, தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கண்களின் மேல் இதை வையுங்கள். இது கண்களின் கீழ் இருக்கும் கருவளையங்களை குறைக்கும். கண்களைச் சுற்றி சுருக்கங்கள் வராமல் இருக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். ஒரு வாரகாலத்திற்கு தொடர்ந்து இதைச் செய்யும்போது நல்ல முடிவைக் காண்பீர்கள்.

4 1575

உதடுகள்

வறண்ட உதட்டால் நீங்கள் கவலையில் இருக்கிறீர்கள் என்றால், இனி கவலையை விடுங்கள். ஆலிவ் எண்ணெய், சர்க்கரை மற்றும் தேன் கலந்த ஃபேஸ்ட்டை உங்கள் உதட்டில் தடவவும். இது உதட்டை மிகவும் மென்மையாக்குகிறது.

உடல்

ஒரு வாழைப்பழம், 3 டீஸ்பூன் கிரானுலேட்டட் சர்க்கரை மற்றும் உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். நீங்கள் குளிக்கும் முன்பு இந்த கலவை உங்கள் உடலில் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர், சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். குழந்தைகளின் சருமத்தை மென்மையாக்க ஆலிவ் எண்ணெயை குழந்தைகளின் கை, கால்களில் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

Related posts

பெண்களின் அழகைப் பாதுகாக்கும் கிருணிப்பழம்

nathan

தோல் அரிப்பை போக்கும் அரச இலை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகு சாதனப்பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் சருமத்தினருக்கான சிறந்த நேச்சுரல் டோனர்கள்

nathan

உங்க சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?சூப்பர் டிப்ஸ்…

nathan

சருமத்தை மென்மையாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்!

nathan

சருமத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்

nathan

ஃபிஷ் ஸ்பா அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்

nathan

பொலிவான சருமத்தை எளிதில் பெற – Ingredients for a clear skin

nathan