23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.800.90 7
Other News

தெரிஞ்சிக்கங்க…இரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்

ஒவ்வொருவரும் தாங்கள் பிறக்கும் திகதியில் திகதிகள் அடிப்படையிலேயே அவர்களின் விதி அமைகிறது என்பார்கள். அதே போல்ஒவ்வொருவரின் ஜாதக கட்டத்திலும் ராகு கேது என்ற இரண்டு கிரகங்களும் இடம்பெற்றிருக்கும். இவை அமைந்திருக்கும் இடத்தைத் பொறுத்து தான்அவர்களின் கர்மாவும், விதியும் இந்த ஜென்மத்தில் அமைகிறது. அந்த வகையில் 2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான எண் கணித ரகசியங்களை பார்க்கலாம்.

இவர்கள் பெற்றத் தாய் பிள்ளை மேல் காட்டுவ்தைப் போல பாசம் அதிகம் கொண்டவர்கள். அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். அதே தருணத்தில் நெருக்கமாக பழகும் தோழிகளாக இருந்தாலும், கணவரின் நண்பர்களாக இருந்தாலும், காதலராக இருந்தாலும், யார் யாரை எங்கு வைக்க வேண்டும்? என்பதில் தெளிவாக இருப்பார்கள். இவர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றுபவராக இருந்தால், பத்து மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றால், இவர்கள் பத்து முப்பது மணிக்கு தான் வருவார்கள். சில தருணங்களில் பதினொன்று முப்பதுக்கு கூட வருவார்கள். ஏனெனில் இவர்களுக்கு சோம்பல் தனம் அதிகம். சிலர் தேய்பிறையில் அதிகமான சோம்பேறித்தனத்துடனும், வளர்பிறையில் சற்று குறைவான சோம்பல் தனத்துடன் இருப்பார்கள். இவர்கள் அலுவலகத்தில் பணியாற்றுவதை விட, மற்றவர்களை வேலை வாங்குவதில் திறமைசாலிகள். பொதுவாக இவர்களிடத்தில் மற்ற ஊழியர்களை மேற்பார்வையிடும் சூப்பர்வைசர், மேனேஜர், பொது மேலாளர் போன்ற பொறுப்பை கொடுத்தால்.. செவ்வனே செய்வார்கள். உடன் பழகுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே மதிப்பிடுவார்கள். காதலரை தெரிவு செய்வதில் நீண்ட நேரம் யோசிக்காமல் பார்த்தவுடன் இவர் தனக்கு ஏற்றவாரா? இல்லையா? என்பதை உடனடியாக அவதானித்துவிடுவார்கள்.

இவர்களிடத்தில் உடலுழைப்பு அதிகமாக இருக்காது. அதே தருணத்தில் இவர்கள் வளர்பிறையில் பிறந்திருந்தால் குண்டாகவும், தேய்பிறையில் பிறந்திருந்தால் ஒல்லியான தேகத்தையும் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும். இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருவுற்றிருக்கும்போது கர்ப்பகால சர்க்கரை நோய்க்கும் ஆளாக நேரிடும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரையின் பாதிப்பு இருக்கும். அதே நேரத்தில் கர்ப்பப்பை தொடர்பான பாதிப்புகளும் ஏற்படும். குறிப்பாக பிசிஓடி எனப்படும் பிரச்சினை வரக்கூடும். முறையாக மருத்துவ சிகிச்சையும், ஒருமுகமாக தெய்வ வழிபாடும் செய்தால் இதிலிருந்து மீளலாம்.

இவர்களுக்கு சர்ப்ப கிரகங்களான ராகு, கேதுவின் தொடர்பு இருக்காது. அப்படி இருந்தால் எதிர்மறை சிந்தனை கொண்டவர்களாகவும், தவறான முடிவினைத் மேற்கொள்பவராகவும் இருப்பார்கள். சில தருணங்களில் சில பொருட்களை திருட வேண்டும் என்ற உணர்வும் இவர்களுக்குள் எழும்.

இவர்கள் தங்கள் வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்றால், விநாயகரை வழிபட வேண்டும். சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பு. நீங்கள் வளர்பிறையில் பிறந்திருந்தால் சதுர்த்தி விரதத்தையும், தேய்பிறையில் பிறந்திருந்தால் சங்கடஹர சதுர்த்தியன்று விரதத்தை மேற்கொள்வது சிறப்பு. உங்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான பாதிப்புகளை தியானங்கள் மூலம் வென்றெடுக்கலாம். தியானத்தைப் பழக வேண்டும். உங்களுக்கு தெரிந்த சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று தியானம் செய்து வழிபடலாம்.

உங்களில் பலருக்கு திருமண வயது இருந்தும் திருமணம் ஆகவில்லை என்றாலோ அல்லது திருமணத்திற்கான வாய்ப்புகள் வந்தும் கைகூடவில்லை என்றாலோ.. இந்த ஆண்டு முழுவதும் குருவின் ஆதிக்கத்தில் நீங்கள் இருப்பதால், ஜீவசமாதி வழிபாட்டை, வியாழக்கிழமைகளில் மேற்கொண்டால் திருமணம் தொடர்பான நேர்மறையான பலன் ஏற்படும். இதற்காக வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பதும் நல்ல பலனை அளிக்கும். உங்களுக்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றாலோ, நீங்கள் காதலித்தவரை கரம் பிடிக்க வேண்டும் என்றாலோ.. உங்களது காதலர் முதலில் 7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்இந்த திகதியில் பிறந்தவர்கள் தான் உங்களின் மனதிற்கேற்ற துணைவராக ஆயுள் முழுவதும் இருக்க இயலும். வேறு எண் காரர்கள் இருந்தால்…யோசித்து முடிவெடுக்கவேண்டும்.

அத்துடன் 7,16,25 ஆகிய திகதியில் பிறந்தவருடன் ஏற்படும் அறிமுகம், நட்பாக மாறி, காதலாகவும் மாறும். அவர்கள் திருமணமானவர்களாக இருந்தால் அவர்கள் மீது எப்போதும் ஒரு இனம் கண்டறிய முடியாத ஈர்ப்பு இருக்கும். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும். அதே தருணத்தில் இந்த திகதிகாரர்கள் பலர் தாமாக முன் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள் அல்லது அவர்களிடம் ஆலோசனை கேட்டால் நல்ல வழியை காட்டுவார்கள். அவர்களே உங்களது காதலர்களாக இருந்தால்.. பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி திருமணம் செய்து கொள்ளலாம். இணைபிரியாத இணையாக வாழலாம்.

உங்களில் சிலருக்கு அலுவலகத்தில் தலைமைப்பதவி கொடுக்க முன் வந்திருக்கிறார்கள் என்றால், அதனை ஏற்கும் முன், பெருமாளை வணங்கிவிட்டு பிறகு பொறுப்புகளை ஏற்றால்… உங்களது தலைமை சிறப்பாக இருக்கும். சாதனை புரியலாம்.

இந்த ஆண்டு (2020) முழுவதும் குருவின் ஆதிக்கத்தில் நீங்கள் இருப்பதால், உங்களில் பலர் குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ இருக்கலாம். குண்டாக இருப்பவர்கள் சைஸ் ஜீரோ அளவிற்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கான முயற்சியை தற்போது எடுக்கலாம். சிலர் இதற்காக கடன் வாங்கியாவது இத்தகைய முயற்சியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இந்த திகதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். இந்த விடயத்தில் உங்களை உங்களது தோழிகள், அவர்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக…உங்களை உடன் அழைத்துச் செல்வார்கள். திருமண சடங்கின்போது உங்களைத் தோழியாகவும் வைத்துக்கொள்வார்கள். எம்மில் சிலர் இந்த அதிர்ஷ்டம் தங்களுக்கு இல்லை என்று கருதினால், முத்துமாலையை அணிய தொடங்குங்கள் அல்லது குரு பகவான் வழிபாடு, சூரிய பகவான் வழிபாடு, முருகப்பெருமானின் வழிபாடு.. இவற்றை வியாழக்கிழமைகளில் மேற்கொண்டால் அதிர்ஷ்டம் தேடி வரும்.

இந்த திகதியில் பிறந்த சிலர் எதையும் திட்டமிட மாட்டார்கள். அதனால் இவர்களிடத்தில் சேமிப்பு என்று ஏதும் இருக்காது. இவர்கள் மெத்த படித்தவர்கள் என்றாலும், கண் பார்க்கும் வேலையை கைகளால் செய்யக்கூடிய அற்புதத் திறமை பெற்றிருந்தாலும், அதனை சமயோசிதமான முறையில் செயல்படுத்த தெரியாது. அத்தகைய தருணங்களில் தோழிகளிடம் ஆலோசனை கேட்கலாம். அதன் பிறகு உங்களுடைய எண்ணத்தில் திட்டங்கள் தோன்றும். அதனை நீங்கள் செயல்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

இந்த திகதியில் பிறந்து திருமணம் செய்துகொண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கும் பெண்கள், மீண்டும் அவருடன் இணைந்து வாழவேண்டும் என்று எண்ணினால்… வியாழக்கிழமைகளில் மஞ்சள் தேய்த்து குளிக்கலாம். வியாழக்கிழமைகளில் நெய் ஊற்றி சாப்பிடலாம். வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை தொடர்ந்தால் கணவரிடம் மாற்றம் ஏற்பட்டு, அவர் உங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி, மீண்டும் இணைந்து விடுவார்கள்.

Related posts

இந்திய நடிகருக்கு தபால் தலை -கௌரவித்த அவுஸ்திரேலியா!

nathan

கணவன் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி -லிப்-லாக்

nathan

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்…

nathan

பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மியின் புகைப்படங்கள்

nathan

வெற்றியைப் பெற்ற ஜெயிலர் திரைப்படம்… படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசு

nathan

பிரம்மாண்டமாக காதணி விழா நடத்திய அறந்தாங்கி நிஷா

nathan

ஜோதிடத்தின் படி எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது-ன்னு தெரிஞ்சுக்கணுமா?

nathan

காதலரின் விருப்பத்திற்கு எதிராக சென்று கருக்கலைப்பு

nathan

அச்சு அசல் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் அறிமுக நடிகை..

nathan