தேவையான பொருள்
இலவங்கம் – 1
சந்தனப்பவுடர் – 1 சிட்டிகை
கசகசா விழுது – 1 டீஸ்பூன்
இவற்றை ஒன்றாகக் கலந்து பருக்கள் மீது பூசி உலரவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால் பருக்கள்
வந்த வேகத்திலேயே காய்ந்து உதிர்ந்து விடும், தழும்பும் ஏற்படாது. ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்துபாருங்கள்.
அடுத்த வாரமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லாதபடி பருக்கள் மறைந்தே போய்விடும். பருக்களினால் தழும்பு வந்து இருந்தாலும் பேஸ்டை போட்டு வந்தால் படிப்படியாக தழும்புகள் மறைவதை காணலாம்.
வெள்ளை மிளகு – 5
பாசிப் பயறு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
இவற்றை வெந்நீரில் ஒரு இரவு முழுக்க ஊறவைத்து, அரைத்து அதை பரு உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். படிப்படியாக பரு மறைந்துவிடும் அதுமட்டுமல்ல புதிதாகவும் பரு வராது.