* நமது இந்திய பெண்களின் தலைமுடி அழகிற்கு பெரிதும் காரணமாக இருப்பது இந்த கறிவேப்பிலைதான். இந்த மசாலாப் பொருள்
நமது உணவிற்கு சுவை சேர்ப்பதோடு மட்டுமல்லாது அடர்த்தியான நீண்ட தலைமுடியை பெறவும் உதவுகின்றது. ஒரு பாத்திரத்தில்
தேங்காய் எண்ணெயை நிரப்பி அதில் சில கறிவேப்பிலை இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும். கரும் கசடு ஏற்படும் வரை
அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கசடை நமது தலைமுடியில் தடவ வேண்டும். இரவு முழுவதும் அல்லது 2-3
மணிநேரங்கள் தடவி பின்னர் குளிக்கவும். இதனை தொடர்ந்து செய்துவந்த சில நாட்களிலேயே உங்கள் தலைமுடி வளர்ந்திருப்பதை
உணருவீர்கள்.
* கொஞ்சம் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இந்த கறிவேப்பிலை பேஸ்ட்டை தயிருடன்
கலந்து, முடியின் மீது மசாஜ் செய்யவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான
ஷாம்புவை கொண்டு கழுவுங்கள். இந்த மாஸ்க்கை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், முடி வளர்ச்சியில் உடனடி
பலனை காணலாம். முடி வளர்ச்சி போக, உங்கள் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் இது மாற்றும்.
* வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும்.
முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண் சிமிட்ட வைத்திடும்.
* கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் கறிவேப்பிலையும் மிகவும் சிறந்த பொருள். ஆகவே கறிவேப்பிலையை அரைத்து, அதனை கூந்தல்
மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள ஆன்டி-செப்டிக் பொருள், தலையில் உள்ள பாக்டீரியா மற்றும்
கிருமிகளை அழித்து, கூந்தல் வளர்ச்சி அதிகரித்து, பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.
* கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் நன்கு முடி வளரும்.