23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1082674 simple travel skincare tips the holiday
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகம் பொலிவாக மிளிர, குளிர்ந்த தண்ணீர் போதும்: நீங்க இதைச் செய்றீங்களா?

உங்கள் சருமத்தை பராமரிக்க சில எளிய வழிகளை நீங்கள் தினசரி காலையில் செய்ய வேண்டும். அதில் ஒன்று தான் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது. எதற்காக இது முக்கியம் என்றால் இது உங்கள் முகத்தில் இரவு முழுவதும் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை அகற்றும். மேலும் இது உங்கள் முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும். நீங்கள் வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போக வேண்டியதில்லை என்றாலும் கூட இது ஒரு நல்ல உணர்வைத் தரும்..

Skin Care routine: முகம் அழகு பெற குளிர்ந்த தண்ணீர்
* இரவு நேரத்தில் சருமத்தில் தேங்கும் எண்ணெய் பிசுக்கை அகற்றுவதோடு அல்லாமல் குளிர்ந்த நீர் காலை நேர வீக்கத்தையும் குறைக்கிறது. சரும செல்கள் இரவில் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டு துளைகள் விரிவடையும் போது வீக்கம் ஏற்படுகிறது.

* முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது நீங்கள் இளமையாக தோற்றமளிக்க செய்யும். அதேபோல் ஒரு ஐஸ் கட்டியை முகத்தில் வைத்து தேய்ப்பதும் மற்றொரு சரும பராமரிப்பு செயலாக கருதப்படுகிறது. முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவுவது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை கணிசமாக அகற்றும்.

* இது சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு சோர்வையும் நீக்குகிறது. இதனால் தான் அதிகாலையில் உரக்கம் வருகிறது என்றால் சிறிது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கூறுகிறார்கள். இது ஒரு நொடியில் அதிக ஆற்றலை ஏற்படுத்தும். உங்கள் சருமமும் அதிக இரத்தத்தை பம்பு செய்ய துவங்கும்.

* ரோஸ் வாட்டரைப் போல குளிர்ந்த நீரும் இயற்கையான டோனராக (toner) செயல்படுகிறது. எனவே வீட்டில் உங்களிடம் டோனர் இல்லையென்றால் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். உண்மையில், இது சருமத்தை டோனிங் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.

* மேலும் சன்ஸ்கிரீனைத் தவிர சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க ஒரு உறுதியான வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது ஒரு கேடயமாக செயல்படுகிறது, மேலும் சூரிய பாதுகாப்பு லோஷனுடன் நன்றாக வேலை செய்கிறது

முகத்தை கழுவிய பிறகு ஒரு மென்மையான துணியால் முகத்தை துவட்டவும்.

Related posts

கண்ணாடி அணியும் பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

ஒரே இரவில் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

முகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு…

nathan

கோல்டன் ஃபேஷியல்

nathan

வெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா?

nathan

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… 35-வயதில் முகம் பளிச்சிட

nathan