29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ygggg
அழகு குறிப்புகள்முகப்பரு

beauty tips .. முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள்

முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும்.

இதனை போக்குவதற்கு இயற்கையில் கிடைக்கும் பொருள்களை கொண்டு தீர்வு காணலாம்.வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும். கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்கும்.
ygggg
ஒரு உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்து முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி, காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள். ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். சிறிது வெந்தயக்கீரை இலைகளை மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள். மேலே கூறியவற்றை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

ஏலியன் தோற்றத்துக்காக மூக்கு, காது, விரல்களை நீக்கிய ‘மனித சாத்தான்’

nathan

தினமும் சோற்றுக் கற்றாழை……

sangika

பளிச்சென்ற முகத்திற்கு

nathan

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

sangika

ஆயுர்வேத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி

sangika

முகப்பரு தழும்பு மாற!

nathan

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை

nathan

கால் நாப்பது துண்டா வெடிச்சிருக்கா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

உங்க முகத்தை வெள்ளையாக மாற்ற வீட்டிலேயே ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயாரிப்பது எப்படி…?

nathan