கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

பொடுகு தொல்லைக்கு முடிவு கட்டும் தேங்காய் எண்ணெய்

 

பொடுகு தொல்லைக்கு முடிவு கட்டும் தேங்காய் எண்ணெய் இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் கவலை அடைய செய்வது பொடுகு தொல்லை. இந்த பிரச்சனை தீர பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையில் செய்யப்படும் முறைகளே நிரந்தர தீர்வை தரும். அவை என்னவென்று பார்க்கலாம்…

* வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். இவ்வாறு வாரம் 3 முறை செய்ய வேண்டும்.

* வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

* தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

* வேப்பிலை கொழுந்துடன், துளசியை சமஅளவு சேர்த்து நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

* வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை வராது.

* தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான சூடு நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

* துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும். இதை வாரம் இருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலையே சேர்த்து சாப்பிட்டு வந்தாலே இந்த நரைமுடி பிரச்சனை வரவே வராது,

nathan

செம்பருத்தி எண்ணெய் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

nathan

வீட்டிலேயே தயாரிக்கும் இந்த ஷாம்பூ வாரத்தில் பலமுறை பயன்படுத்தினாலும் கூந்தலுக்கு எந்த ஒரு எதிர்வினையையும் உண்டாக்குவதில்லை….

sangika

வழுக்கைத் தலையில் முடி வளர்ச்சியைத் தூண்டணுமா? சூப்பரா பலன் தரும்!!

nathan

கூந்தல் பராமரிப்புக்கு இயற்கை முறை பராமரிப்புக்கள்!….

sangika

சூப்பர் டிப்ஸ் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடுகு எண்ணெய்

nathan

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வெள்ளை முடிப்பிரச்சனைக்குக்(white hair) இயற்கை வழிமுறையகள்…

nathan

சூப்பர் டிப்ஸ் பொடுகு தொல்லையை எளிமையாக இயற்கை முறையில் போக்கும் வழிகள்

nathan